விராட் கோலியால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியுமா? தினேஷ் கார்த்திக் கொடுத்த சூசக பதில்.
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.
கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் இன்னும் சில காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. இதனால் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலியை முறியடிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தினேஷ் கார்த்திக் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 வயதில் விளையாட தொடங்கினார், அது வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அதேசமயம் விராட் கோலி மிகவும் பின்னர் தொடங்கினார். அந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் வித்தியாசமாக இருக்கலாம். இது 34 முதல் 40 வரை பிடிக்க முயற்சிப்பதை விட 16 முதல் 21 வரை வித்தியாசமானது. இது முற்றிலும் இரண்டு வெவ்வேறு பந்து கேம்கள்.
விராட் கோலி சாதித்தது அற்புதமானது அவர் சச்சினின் சாதனையைத் தொடச் சென்றாலும், தோல்வியடைந்தாலும் அல்லது அவரை விட முன்னேறினாலும், அவர் இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும், உலக கிரிக்கெட்டின் சிறந்த பேட்டர்களில் ஒருவராகவும் வெளிவரப் போகிறார் என்று நீங்கள் சொல்ல வேண்டும். விராட் கோலி 50 ஓவர் கிரிக்கெட்டில் எவ்வளவு சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினார் என்பதை வைத்தே அவரது திறமையை நாம் அறிந்து கொள்ளலாம்..
விராட் கோலியை தற்போது நெருங்கக் கூட யாரும் இல்லை, மேலும் நெருங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. ஒருநாள் போட்டிகளில் அவர் சாதித்தது பல. மேலும் 50 ஓவர் கிரிக்கெட் இப்போது மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 50 ஓவர் கிரிக்கெட்டின் வாழ்க்கை என்னவாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் அது நீடிக்கும் வரை, கிங் கோலி அந்த வடிவத்தின் ராஜாவாக இருப்பார் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
இந்நிலையில் தற்போது நடந்துவரும் ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தடுமாறிய விராட் கோலி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான சரியான ஒரு கம்பேக் கொடுத்தார். 94 பந்துகளில் 122 ரன்களை விளாசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 77வது சதத்தை நிறைவு செய்தார் விராட் கோலி.