சூப்பரா பிளான் பண்ணி தூக்குனாரு – ரோஹித் ஷர்மா கேப்டன்சியை பாராட்டிய தினேஷ் கார்த்திக்.

இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா.இந்நிலையில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸுக்கு

By ·

இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. இதற்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியுள்ளது இந்தியா.இந்நிலையில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஏனென்றால் பிட்ச் ரிப்போர்ட்டில் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக மாறியது. உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌளரான அஸ்வின் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இடம் பெறவில்லை என்றாலும் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இவருடன் கைகோர்த்த ஜடேஜாவும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஹம்மது சிராஜ் ஒரு விக்கெட்டும் ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட்டும் எடுத்து வெஸ்டி இண்டீஸ் அணியை 150 ரன்களுக்கும் ஆல் அவுட் செய்தனர்.

இதனிடையே தற்போது இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அற்புதமான தொடக்கத்தை கொடுத்துள்ளனர். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரை சதம் அடிக்க இன்னமும் 10 ரன்கள் மட்டுமே தேவை. அதோடு இவருடன் கைகோர்த்து ஆடிவரும் ரோஹித் ஷர்மாவும் 65 பந்துகளில் 30 ரன்கள் அடித்துள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணியின் 80 ரன்களை விளாசி விக்கெட்டுகள் எதுவும் இழக்காமல் உறுதியாக இருக்கிறது.

தினேஷ் கார்த்திக் கூறியது :

இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய வீரரான தினேஷ் கார்த்திக் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பேசியுள்ளார். மேலும் ரோஹித் சர்மா விக்கெட்டுகளை எடுக்க சரியான நேரத்தில் செய்த சில விஷியத்தையும் கூறியுள்ளார். அவர் பேசுகையில் ” வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டு செட்டில் ஆனா பேட்ஸ்மேன்களை வீழ்த்த ரோஹித் ஷர்மா செய்த பிளான் ஆச்சரியமாக இருந்தது. அதேனேஸ் மற்றும் ஹோல்டர் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயன்றனர்.

அப்போது மைத்தனத்தில் கொஞ்சம் பவுன்ஸ் இருப்பதை அறிந்து கொண்ட ரோஹித் ஷர்மா சரியான நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜை களமிறங்கினார். அந்த திட்டம் அவர்களிடம் சரியாக செயல்பாடு பார்ட்னர் ஷிப்பை உடைத்தது. ஹோல்டர் பயின் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க பின்னர் மற்றவர்களை சப்பினர்கள் பார்த்து கொணடனர் என்று கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாராட்டியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை