இந்த விஷயம் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஸ்பெஷலான வீரராக மாற்றியுள்ளது – தினேஷ் கார்த்திக்.

டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின

By ·

டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்டின் 2 ஆம் நாளில் ஜெய்ஸ்வால் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் 229 ரன் என்ற நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணைந்து விளையாடினர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் தொடக்க போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்டது, சதம் அடித்தது என பல சாதனைகளையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த தினேஷ் கார்த்திக் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி பேசியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கூறியது :

இயன் பிஷப் சொல்லியதை யஷஸ்வி ஜெய்ஸ்வால் என்ற பெயரை நாம் நினைவு வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக வருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அவருக்கு ஷாட்டுகளை சரியாக வருகிறது, அவருக்கு வரம்பு, மனோபாவம் இருக்கிறது. மேலும் ரன்களை அடித்த வேண்டும் என்ற அந்த பசி அவரை ஒரு ஸ்பெஷலான வீரராக மாற்றியிருக்கிறது.

விஜய் ஹசாரே டிராபியின் போது கோவாவில் அவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் உரையாடியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் அதிகமாக ரன்களை எடுக்கவில்லை, அதோடு சந்தேகமாகவும் இருந்தது. ஆனால் அவர் தற்போது மிகவும் ஸ்பெஷலான ஒரு வீரராக மாறியிருக்கிறார் என்றார் தினேஷ் கார்த்திக்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதனை பெரிய விளையாட்டுகளுக்கு எடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் தரமான மைத்தனங்கள் மற்றும் தரமான அணிகளுக்கு எதிராக பெரிய அணிகளுக்கு எதிராக கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். இங்கு தான் வெஸ்ட் இண்டீஸ் தரத்தில் கொஞ்சம் குறைந்து விட்டார்கள் என்றார் தினேஷ் கார்த்திக்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை