வீடியோ : ஆஷஸ் தொடரின் வெற்றியாளரை கணித்த தினேஷ் கார்த்திக் – அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் டா

By ·

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் பொறுமையாக விளையாடிய இங்கிலாந்து 54.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை எடுத்தது

அதனை அடித்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ரன்களை தொடக்கத்தில் அதிகமாக எடுத்துலயும் பின்னர் விகேட்டுக்களி இழந்து தடுமாறி 295 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து பேட்டிங் செய்த இஇங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்கில் 395 ரன்களை விளாசியது.

இப்படிப்பட்ட நிலையில் இது இங்கிலாந்து அணிக்கு நல்ல ஸ்கோர் தான், ஆனால் இந்த போட்டியில் ஒருவேலை ஆஸ்திரேலிய சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை வீழ்த்தியது என்றால் 21 வருடங்களுக்கு பிறகு தங்களுடைய மண்ணில் இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் வீழ்த்தப்பட்டது என்ற மோசமான சங்கடம் இங்கிலந்து அணிக்கு உண்டாகும்.

மறுபுறம் ஒருவேளை இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பாடு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றது என்றால் இந்த தொடரானது 2-2 என டிராவாகும், ஆனால் ஆஸ்திரேலியா தற்போது நடந்துவரும் 5வது போட்டியை டிரா செய்ததது என்றாலும் அஸ்திரலியா 2-0 என்ற கணக்கில் இந்த தொடரை வெல்லும். இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிர்களின் கண்களும் தற்போது ஆஷஸ் போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தான் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் யாருக்கு வெற்றி என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “நான் நேற்று வர்ணனனை செய்து கொண்டிருக்கும் போதே இதை சொன்னேன். இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் மொயீன் அலி 4 மற்றும் 5 ஆம் நாள்களில் சிறந்த முறையில் பந்துவீசவில்லை என்பதை ஒரு காரணமாக சொல்லலாம்.

நீங்கள் விக்கெட்டுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறீர்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் அதைச் செய்ய சிறந்த வாய்ப்பு உள்ளது, ஆனால் இங்கிலாந்தில் அந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்றார் தினேஷ் கார்த்திக். இவர் சொல்வதை போல மெயின் அலி மற்றும் ஜோ ரூட் இருவரும் பெரிதாக இந்த தொடரில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. அதே நேரத்தி இந்த செய்தியை எழுதும் வரையில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 எட்டுத்துளது. இதனால் ஆஸ்திரேலியா அன்னிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை