என்னை பொறுத்தவரையில் இந்த உலக கோப்பையில் கேஎல் ராகுல் சிறந்த விக்கெட் கீப்பர் – தினேஷ் கார்த்திக்
க கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இந்தியா தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தை நேற்று விளையாடியது. இந்த போட்டியில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிய 50 ஓவர்கள் முடிவ
க கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இந்தியா தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தை நேற்று விளையாடியது. இந்த போட்டியில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிய 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழுந்து 410 ரண்களை குவித்து இருந்தனர்.
84 பந்துகளில் தனது உலகக்கோப்பை முதல் சதத்தை பூர்த்தி செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். அதன் பின்பு அதிரடியை காட்டதொடங்கிய கே.எல் ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார் 102 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் 128ரன்களையும் குவித்து இருந்தார். இதன் மூலம் இந்தியா அதிகமான ரன்களை விலாச முடிந்தது. மேலும் நெதர்லாந்து அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வெல்லவும் முடிந்தது.
இந்நிலையில் கேஎல் ராகுல் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தையும் அதே நேரத்தில் இந்திய அணிக்கு ஒரு பலமான நம்பர் 5 இடத்தில் இறங்கும் பேடினஸ்மேனாகவும் அற்புதம் காட்டிவரும் கே எல் ராகுலை பலரும் பாராட்டிவரும் நிலையில் தான் இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் கே எல் ராகுல் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்தும் பேசியுள்ளார்
அவர் கூறுகையில் “இது மிகவும் கடினமான கேட்ச் ஆகும், ஏனெனில் அது கால் கீழே சென்று கொண்டிருந்தது மற்றும் அவரது பார்வை என்னவாக இருந்திருக்கும் என்பதை மறைத்தது. மிக முக்கியமாக ஓன்று பந்து மிகவும் தடிமனான விளிம்பில் பட்டது. அதனால் விலகல் இருந்தாலும் அதனை அவர் தனது இடது கையால் பிடித்தார். மேலும் அவரது கைகள் நல்ல நிலையில் இருந்ததால் அந்த பந்தை மிகவும் அழகாக பிடித்தார்.
அவர் இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல, உலகக் கோப்பை முழுவதிலும் ஒரு கீப்பராக அற்புதமாக இருந்து வருகிறார். இந்த உலகக் கோப்பையில் ஸ்காட் எட்வர்ட்ஸுடன் இணைந்து கே.எல்.ராகுலும் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். போட்டியின் தொடக்கத்தில் கே.எல். ராகுலிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று கிடையாது. ஏனெனில் அவர் பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர் மற்றும் ஒரு பேக்-அப் கீப்பராக இருந்தார். அதனை அவர் தற்போது சிறப்பாகவும் செய்து வருகிறார் என்றார் தினேஷ் கார்த்திக்.