இவரே இப்படி செயதால் ரொம்ப கஷ்டம் – ஆல்ரவுண்டர் குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து.
ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. மேலும் இதில் சில நல்ல விஷயங்களும் இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியில் காயம் காரணமாக வெளியேறியிருந்த பல வீரர்கள் தற்போது இந்திய அணிக்கு திரு
ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. மேலும் இதில் சில நல்ல விஷயங்களும் இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியில் காயம் காரணமாக வெளியேறியிருந்த பல வீரர்கள் தற்போது இந்திய அணிக்கு திரும்பி நம்பிக்கையூட்டும் வரையில் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர்.
குறிப்பாக கேஎல் ராகுல், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது. இருப்பினும் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் வங்கதேசத்துக்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியில் 42 ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார். அதை விட அப்போட்டியில் காயத்தை சந்தித்து வெளியேறியுள்ள அவர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலைமையில் இந்திய அணிக்கு ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இருட்னஹா போதிலும் ஜடேஜா பேட்டிங்கில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக 2022க்குப்பின் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் இதுவரை 10 இன்னிங்ஸில் விளையாடிய ஜடேஜா வெறும் 158 ரன்களை 22.57 என்ற சுமாரான சராசரியிலேயே எடுத்துள்ளார்.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா இப்படி பேட்டிங்கில் ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறுவது 2023 உலகக்கோப்பைக்கு முன்பாக கவலையை ஏற்படுத்துவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் “டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா தம்முடைய பேட்டிங்கில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவராகவும் நம்பிக்கையை கொடுப்பவராகவும் இருக்கிறார். ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முக்கிய வீரரான அவர் தன்னுடைய பேட்டிங்கில் சிறப்பாக இல்லை.
குறிப்பாக அவர் கடந்த 2013 சாம்பியன் டிராபி போல சிறப்பாக செயல்படும் போதெல்லாம் இந்தியா அணிக்கு பெரிய வெற்றிகளை அவர் பெற்றுக்கொடுத்துளார் எனவே முக்கிய தொடர்களில் இந்தியா வெல்ல அவர் பேட்டிங்கில் அசத்த வேண்டியது முக்கியம். அதை செய்தால் பந்து வீச்சில் அசத்தவில்லை என்றாலும் அவருடைய பேட்டிங்கால் இந்தியா வெற்றி காண முடியும்.
ஆனால் அவர்கள் ரன்கள் அடிக்காமல் போனால் அது இந்தியாவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இது போக அக்சர் படேல், ஜடேஜா இருவருமே இடது கை ஸ்பின்னர்களாக இருப்பது மற்றும் ஒரு கவலையளிக்கும் விஷயமாகும். அதில் அக்சர் பட்டேல் பேட்டிங்கில் அசத்தினாலும் சூப்பர் 4 சுற்றில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் கூட பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.