ரோஹித் ஷர்மாவுடன் கில்லை களமிறக்க வேண்டாம். அதற்கு பதில் இந்த வீரர் தான் இருக்க வேண்டும் – கிரண் மோர்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உ

By ·

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.

இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது.

இதில் இந்திய அணிக்கு இரண்டு தொடக்க வீரர்கள் உள்ளனர். அதில் யாரை நாளை யாரை விளையாட வைப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து கிரண் மோர் கூறுகையில் ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தான் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும். அவரிடம் ஆக்ரோஷமான பேட்டிங் இருகின்றது. அவர் முதல் பந்திலே அவரது அவர் ஆக்ரோஷத்தை வெளிப்படுதிகிறார். கில் சிறப்பான வீரர் தான் ஆனால் அந்த இடத்தில் இடது கை பேட்ஸ்மேன் விளையாட வேண்டும்.

மிடில் ஆர்டரில் ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவருமே விளையாட வேண்டும். ரிங்கு போலவே திலக் வர்மாவும் 360 டிகிரியில் அடிக்கக் கூடியவர். நாம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த இருவருக்குமே தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்கள், ரோஹித் ஷர்மா(c), சுப்மான் கில், ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சண் சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை