அணியில் எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை, எனக்கு அதிகமாக நண்பர்களும் இல்லை – பிரிதிவ் ஷா வருத்தம்
ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் சுப்மன் கில் மற்றும் இ
ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் சுப்மன் கில் மற்றும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத பிரதிவ் ஷா இருவரும் U19 ஒரே அணியில் தான் இருந்தார்கள்.
U19 உலகக்கோப்பையில் நிசிலாந்து அணியை வீழ்த்திய பிறகு ஆஸ்திரேலியாவை பைனலில் வீழ்த்தியது அந்த அணி. மேலும் அந்த அணிக்கு பிரதிவ் ஷா கேப்டனாகவும், கில் மேன் ஆஃப் தி டோர்னமெண்ட்டாகவும் இருந்தார். இதனால் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றார் கூறப்பட்டது. அதே போன்று ஷா இந்திய அணியில் 2018ஆம் ஆண்டு இணைந்தார். இவருடைய பேட்டிங்கை பார்த்து அடுத்த சச்சின் டெண்டுல்கர் இவர் தான் என்று பலர் கூறினார்.
ஆனால் வெஸ்ட் இன்டிங்ஸ்க்கு எதிரான போட்டிக்கு பிறகு அவருடைய கிரிக்கெட் வாழ்ககை தலைகீழாக மாறி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா 8 போட்டிகளில் வெறும் 116 ரன்கள் தான் அடித்திருந்தார். அவருடைய பிரச்சினையே அவரினால் வேகமும், ஸ்விங்கும் தான். அதனை பயன்படுத்தி இவரை தொடக்கத்திலேயே அணிகள் ஆட்டமிழக்க செய்து விடுகின்றனர். இப்படி பட்ட நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்குபெறாத ஷா பேட்டியில் பேசியிருக்கிறியார்.
பிரித்வி ஷா :
அதில் “இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட போது அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. சிலர் ஃபிட்னஸ் காரணம் என்று தெரிவித்தனர். ஆனால் அதன் பின் நான் பெங்களூருவில் இருக்கும் என்சிஏவுக்கு சென்று சோதனைகளில் தேர்வாகி நல்ல மீண்டும் டி20 அணியில் கம்பேக் கொடுத்தேன். இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் எனக்கு வாய்ப்பு கொக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ள நான் இதிலிருந்து நகர வேண்டியுள்ளது. இதற்கு நான் எதுவும் செய்ய முடியாது யாரிடமும் சண்டையும் போட முடியாது.
ஒரு மனிதராக நான் என்னுடைய விருப்பப்படி இருக்க விரும்புகிறேன். என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நான் யார் என்று அவர்களுக்கு புரியும். எனக்கு எந்த நண்பர்களும் கிடையாது. நானும் நண்பர்களை உருவாக்குவதும் இல்லை. அது தான் இந்த தலைமுறையில் நடக்கிறது என்றே சொல்லலாம். உங்களுடைய எண்ணங்களை நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. அது மிகவும் பயங்கரமானது.
நான் எந்த போட்டியாக இருந்தாலும் அதனை விளையாட நினைக்கிறேன். அது முதல் தர கிரிக்கெட்டை போன்றதுதன பெரிதாக எதுவும் கிடையாது. மேலும் அடுத்ததாக நடைபெறும் தியோதர் கோப்பையில் வழக்கம் போல நான் விளையாட உள்ளேன். இந்த அத்தொடரில் விளையாடுவதற்கு அழைப்பு வந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
நான் அங்கு சென்று அணிக்கு ரன்களை அடிக்க போகிறேன். நான் சிறப்பாக செயல்பட்டதாலயே அந்த தொடருக்கு என்னை அழைத்துள்ளார்கள் என்பது உங்களுக்கு புரியும். அவர்களுக்கு நான் எதோ ஓன்று செய்வேன் என்று நினைத்ததால் தேர்வுசெய்திருக்கிறார்கள் அது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றார் பிரித்வி ஷா.
இன்னமும் 12 விக்கெட்டுகள் எடுத்தால், சர்வதேச டெஸ்ட் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியா முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார் ஜேம்ஸ் ஆண்டர்சன்