இப்படி பொய்யான செய்தி பரப்புவதை நிறுத்துங்கள், ரோஹித் சர்மா பற்றி அப்படி நான் சொல்லவே இல்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே மும்பை .ணி கேப்டன் ரோஹித் சர்மாவை தவறாக கூறியதாக பரவி வரும் தகவல் குறித்து முதன் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார் துஷார் தேஷ்பாண்டே. மும்பை மற்றும் சென்னை அணிக்கு இடையே இந்த சீசனுக்கான முதல் ஐபிஎல் போட்டி கடந்த சனிக்கிழம
சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே மும்பை .ணி கேப்டன் ரோஹித் சர்மாவை தவறாக கூறியதாக பரவி வரும் தகவல் குறித்து முதன் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார் துஷார் தேஷ்பாண்டே. மும்பை மற்றும் சென்னை அணிக்கு இடையே இந்த சீசனுக்கான முதல் ஐபிஎல் போட்டி கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த போட்டி மும்பையின் ஹோம் கிரவுண்டில் நடந்தது என்பதினால் மும்பை அணிக்கே அதிகம் பெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்திலேயே பல நல்ல வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 158ரன்கள் இலக்காக வைத்து களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தது.
ஆனால் அதற்குப்பிறகு வெறி ஆட்டம் ஆடிய ரஹானே ஒரே ஓவரில் 23 ரன்கள் அடித்தார். மேலும் 27 பந்துகளில் 61 ரன்கள் அடுத்து சென்னை அணியை சுலபமாக வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் இந்த போட்டியில் ரோஹித் சர்மாவை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே போல்ட் அவுட் ஆக்கினார், அந்த வீடியோ ஷோசியல் மீடியாவில் வைரலானது. அதனை தொடர்ந்து தான் துஷார் தேஷ்பாண்டே ரோஹித் பற்றி தவறாக கூறியதாக தகவல்கள் பரவியது.
Good morning to only CSK & Tushar Deshpande fans pic.twitter.com/418G5q4hzc
— सरदार™🇮🇳🚩 (@Sunilhuh) April 9, 2023
அதாவது விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்றவர்களைக் காட்டிலும் ரோஹித் அவுட் செய்வதர்க்கு எளிதான பேட்டர் என்று தேஷ்பாண்டே கூறியதாக பல செய்திகள் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் இது தொடர்பாக ஐபிஎல் இணையதளத்திலோ அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் கைப்பிடியிலோ ரோஹித் சர்மாவை பற்றிய எந்தப் பேட்டியும் இல்லாததால் அவர் அப்படிச் சொன்னாரா இல்லையா என்பது ரசிகர்களுக்குத் தெரியவில்லை.
இந்நிலையில் தான் துஷார் தேஷ்பாண்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவம் நடந்து ஒரு நாளுக்கு பிறகு முதன் முறையாக பதிலளித்துள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அப்படி எந்த விஷியத்தை பற்றியும் பேசவில்லை என்று கூறியுள்ளார். அவர் போட்டிருந்த பதிவில் மேலே அணைத்து பெரிய வீரர்களின் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. நான் இதுபோன்ற எந்த ஒரு கீழ்த்தரமான அறிக்கைகளையும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன்.
எனவே போலி செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எழுதினார். அந்த பதிவு தற்போது வைரலான நிலையில் ரோஹித் சர்மா பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .