டிரா ஆனது பத்தாதுன்னு இது வேறயா? ENG vs AUS போட்டியில் “ஸ்லோ ஓவர்-ரேட்” குறித்து கருத்து தெரிவித்த ஜாம்பவான்கள்

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023 போட்டியானது சமீபத்தில் முடிவடைந்தது இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது உலக சாம்பியன் ஷிப் 23-25 சுற்றானது தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்த சுற்றில் நேற்று நடந்து முடிந்த ஆஷஸ் தொடரும் இருந்த

By ·

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2023 போட்டியானது சமீபத்தில் முடிவடைந்தது இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது உலக சாம்பியன் ஷிப் 23-25 சுற்றானது தொடங்கி விட்டது. இந்நிலையில் இந்த சுற்றில் நேற்று நடந்து முடிந்த ஆஷஸ் தொடரும் இருந்தது. இந்த போட்டியானது 2-2 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டாலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அதாவது இந்த போட்டியின் போது அவர்கள் ஒரு நாளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை காட்டிலும் குறைவான ஓவர்களை வீசியதால் இரண்டு அணிகளுமே பாய்ண்டுகளானது குறைக்கப்பட்டது. குறிப்பிடதக்க வகையில் இங்கிலாந்து அணிக்கு 19 பாய்ண்டுகளும் ஆஸ்திரேலிய அணிக்கு 10 பாய்ண்டுகளும் குறைக்கப்பது. இது இப்போது பிரச்னையாக இல்லாமல் இருந்தாலும் WTC 2025 முடிவு நேரத்தின் போது பிரச்னையாக மாறலாம்.

இந்த நிலையில் தான் முன்னாள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் நாசர் ஹுசைன் இந்த ஸ்லோ ஓவர்-ரேட் குறித்து பேசியுள்ளார்.

இதற்கு ரிக்கி பாண்டிங் கூறுகையில் “விளையாட்டில் எல்லா நேரமும் எப்படி செலவாகிறது என்பதை என்னால் பார்க்க முடியவில்லை, அதுதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் இப்போது ஒவ்வொரு நாளும் கூடுதலாக அரை மணி நேரம் விளையாடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஆறு அல்லது ஏழு ஓவர்களை விளையாட முடியாமல் போகிறது. இது எனக்கு சத்தியமாக புரியவில்லை.

இதற்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அம்பயர்களும் இதில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். நடுவர்கள் வீரர்களை தயார்படுத்தவும், ஒழுங்கமைக்கவும், பேட்டரை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதிசெய்யவும், பேட்ஸ்மேன் தனது கிரீஸுக்கு திரும்பும்போது பந்துவீச்சாளர் சரியான இடத்தில் இருப்பதை உறுதிசெய்யவும் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த போட்டிகளில் அதிக நேரத்தை இழக்காமல் இருக்க ஒரு வழியை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் ரிக்கி பாண்டிங்.

நாசர் ஹுசைன் கூறியது :

ரிக்கி பாண்டிங்கை தொடர்ந்து பேசிய நாசர் ஹுசைன் கூறுகையில் “தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது ரசிகர்களை சோகமடைய வைக்கும் ஒரு விஷயம். குறிப்பாக இங்கிலாந்தில் டிக்கெட்டுகளின் விலை மிகவும் அதிகம். எனவே அதற்கான போட்டியை பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள். இப்போது சில வந்து நீங்கள் எப்படி இருந்தாலும் ஜாலியாகத்தானே இருக்குங்க போகிறீர்கள் என்று. ஆனால் நீங்கள் 90 ஓவர்களுக்கு பணம் கொடுத்தால், 90 ஓவர்களை எதிர்பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார் நாசர் ஹுசைன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை