ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து டாஸின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் – 4 போட்டிகளுக்கு பிறகு நடந்திருக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும் 6 முறை போட்டியானது சமன் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வருடத்திற்காக ஆஷஸ் 5 போட்டிகள் கொண்ட
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும் 6 முறை போட்டியானது சமன் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வருடத்திற்காக ஆஷஸ் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா முதல் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக 2 வது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
இதனால் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் முறை மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அந்த நிலையில் தான் மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து ஒரு வழியாக வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து இந்த தடாரின் 4வது போட்டியில் இங்கிலாந்து மிகவும் அற்புதமாக விளையாடியது, பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருவருமே மிகவும் சிறபபிக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க இவர்களுக்கு இடையே மூன்றவது போட்டியாளராக வைத்த மழை இங்கிலாந்து அணியின் வெற்றி கனவை தகர்த்தது.
இதனால் போட்டி டிரா செய்யப்பட்டது. மேலும் இதனால் ஆஸ்திரேலியாவே மீண்டும் ஆஷஸ் கோப்பாயை தக்க வைத்து கொண்டது.இதனையடுத்து கடைசி போட்டியானது 5 வது போட்டியானது நடிப்பெற்றது வருகிறது. என்னதான் ஆஸ்திரேலியா 2போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு இதனை போட்டியானது அவர்களுடைய தன்மான பிரச்னை. மறுபக்கம் இங்கிலந்து இந்த போட்டியில் தோல்வியை தழுவினால் பாஸ்பால் முறை குறித்தும் இங்கிலாந்து குறித்தும் விமர்சிப்பார்கள் என்ற நிலை நிலவுகிறது.
டாஸ் போது நடந்தது :
இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸை ஆஸ்திரேலியா வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் டாஸின் போது பேசிய பாட் கம்மின்ஸ் கூறுகையில் “டாஸ் போடப்பட்ட காயினை இரண்டு முறை சோதிக்க வேண்டும். முதன் முறையாக இந்த சீசனில் டாஸ் வென்றிருக்கிறோம். கொஞ்சம் மேக மூட்டம் இருப்பதினால் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் கேமரூன் க்ரீனுக்கு பதிலாக டாட் மஃபிர் வந்துள்ளார்.
இந்நிலையில் அடுத்து பேசினாய் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் : டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துவீச்சயே தேர்வு செய்திருப்போம். நாங்கள் இங்கே டாஸ் வெல்லும் போதெல்லாம் பந்துவீச்சையே தேர்வு செய்வோம். ஆஷஸ் தொடரை வென்று இங்கிருந்து வெளியேற ஆஸ்திரேலியா விரும்புகிறது. நாங்கள் தொடரை சமன் செய்ய விரும்புகிறோம். எனவே போட்டி இன்னமும் முடியவில்லை என்றார் பென் ஸ்டோக்ஸ்.