இங்கிலாந்தை ஆட்டம் காண வைத்த டேவின் கான்வே, அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரன். அசால்டாக வென்ற நியூசிலாந்து.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக் கோப்பை 2023 தொடரானது இன்று அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவின் மிகவும் அழகான கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தனத்தில் தொடங்கியது. இந்த போட்டியானது மதியம் 2.30 மணிக்கு இங்கிலாந்துக்கு எதிரா
அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக் கோப்பை 2023 தொடரானது இன்று அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவின் மிகவும் அழகான கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தனத்தில் தொடங்கியது. இந்த போட்டியானது மதியம் 2.30 மணிக்கு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணியானது மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது பந்துவீசிய தேர்வு செய்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ 33 ரன்களில் ஆட்டமிழக்க டேவிட் மாலன் 14 ரன்கள் அவுட்டாக்கினார். பின்னர் ஹாரி ப்ரூக் 15 ரன்கள் ஆட்டமிழந்த நிலையில் அனுபவ வீரரான மொயின் அலி 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணியானது சரிவை சந்தித்தது. இருந்த போதிலும் பொறுப்பாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (42) ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் அதிரடி வீரரான லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்களிலும் ஜோ ரூட் 77 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் அந்த பேட்ஸ்மேன்கள் பெரிதும் எதுவும் செய்யாத நிலையில் இங்கிலாந்து அணியானது ஆழவுட்டிலிருந்து தன்னை காத்துகொண்டு 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளும் மிச்சல் சாட்னர் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி நியூசிலாந்து அணிக்கு உதவினார்கள்.
இதனை தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியானது தொடக்கத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்தது. குறிப்பாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான வில் யங் தான் சந்தித்த முதல் பந்திலேயே இங்கிலாந்தும் அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரனிடம் ஆட்டமிழந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விஷயமாக இருந்தது. மேலும் சாம் கரன் வீசிய இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட் கூட விழ வில்லை.
ஆனால் அதற்கு பிறகுதான் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான டேவின் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரன் இருவரும் இணைந்து மேஜிக் இன்னிங் விளையாடினார்கள். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீசிய நாலாபுறமும் சிதறடிக்க ரச்சின் ரவீந்திரன் மற்றும் டேவின் கான்வே இருவரும் 36 பந்துகளில் அரை சதம் அடித்தனர்.மேலும் அங்கேயே இருவரும் நிற்காமல் தொடர்ந்து பாட்னர்ஷிப்பை உயர்த்தினர்.
மேலும் அற்புதமாக விளையாடிய டேவின் காணவே 83 பந்துகளில் சதம் அடித்தார். அவரை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரன் 80 பந்துகளில் சதமடிக்க 30வது ஓவரின் போது இவர்களின் பாட்னர்ஷிப் 200 ரன்களை கடந்தது. இறுதியில் அற்புதமாக விளையாடிய டேவின் கான்வே 121 பந்துகளில் 152 ரன்களை விளாச ரச்சின் ரவீந்திரன் 96 பந்துகளில் 123 ரன்களை அடித்து 36.2 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணியை வீழ்த்தினர். இதன் மூலம் முதல் போட்டியிலேயே வெற்றியுடன் 2023 உலக கோப்பைபை தொடங்கியுள்ளது நியூசிலாந்து அணி.