பேஸ்பால் ஆட்டத்தை நிருபித்த இங்கிலாந்து வீரர்கள். விக்கெட்டை எடுக்க திணறிய இந்திய பந்துவீச்சாளர்கள்.
IND vs ENG முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் நேற்று முதல் நாளில் காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் ஜடேஜா மற்றும் சிறப்பாக பந்துவீச்சு இங்கிலாந்து அணியை சுருட்டி
IND vs ENG முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் நேற்று முதல் நாளில் காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் ஜடேஜா மற்றும் சிறப்பாக பந்துவீச்சு இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தனர். இங்கிலாந்து அணி 246 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்து இருந்தனர். தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி இருந்தனர். நாள் முடிவில் இந்திய அணி 119 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அதில் ஜெயஸ்வால் 76 ரன்களும் 24 ரன்களும் 14 ரன்களும் அடித்து இருந்தனர். ரோஹித் ஷர்மா மட்டுமே தனது விக்கெட்டை இழந்து இருந்தார்.
இன்றைய நாள் தொடக்கத்தில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் சற்று நேரத்தில் கில்லும் 23 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் கேஎல் ராகுல் 86 ரன்களும் ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களும் ஸ்ரீகர் பாரத் 41 ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 1ரன்களும் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன் பின் ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அக்சர் பட்டேலும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிதற அடித்தனர்.
இறுதியாக இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்களை அடித்து இருந்தனர். எனவே இந்திய அணி 175 ரன்கள் முன்னிலையில் நேற்றைய நாளை முடிவு செய்தது. இன்றைய நாளில் களமிறங்கிய இந்திய அணி 436 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் முன்னிலையில் இருந்து வருகிறது. அதன் பின் இன்றைய நாளிலே இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தது. இன்றைய நாளை அருமையாக தொடங்கிய இங்கிலாந்து அணி நாள் முடிவில் 316 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது.
இதில் இந்திய அணியின் வீரர்கள் சற்று கடினப் பட்டு தான் பந்து வீசி இருந்தது. இதில் அதிக பட்சமாக போப் 148 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார். டக்கெட் 47 ரன்களும் போக்ஸ் 34 ரன்களும் அடித்து இருந்தனர். பும்ரா மற்றும் அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சு இன்றைய நாளில் மிகவும் சுமாராகவே பந்துவீசி இருந்தது.