“592 ரன்கள்” ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடிய இங்கிலாந்து – பாஸ்பால் முறை கைகொடுக்கிறதா?
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரானது தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சிறப்பாக விளையடி 3 போட்டிங்களில் 2 போட்டிகளால் அஸ்திரேலியாவும் பின்னர் 3வது போட்டியில் அழுத்தத்துடன் சிறப்பாக் விளையாடிய இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தற்போது 2-1 என்ற கணக்கில் இர
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரானது தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சிறப்பாக விளையடி 3 போட்டிங்களில் 2 போட்டிகளால் அஸ்திரேலியாவும் பின்னர் 3வது போட்டியில் அழுத்தத்துடன் சிறப்பாக் விளையாடிய இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தற்போது 2-1 என்ற கணக்கில் இருக்கிறது. இதனால் 4வது போட்டியானது மிகவும் கடுமையாகவும் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான உஸ்மான் கவாஜா 4வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு பொறுமையாக விளையாடிய டேவிட் வார்னருக்கு இந்த போட்டியிலும் மோசமான தொடக்கமாக 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.இதற்கு பிறகு வந்த ஸ்மித் மற்றும் லபுச்சானே இருவரும் இணைத்து ரன்களை குவிக்க பொறுமையாக ஆடிவந்த ஸ்மித் 50 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க் வுட்டிடம் ஆட்டமிழந்தார்.
இருந்த போதிலும் இவருக்கு பிறகு வந்த டிராவிஸ் ஹெட் லபுச்சானேவுடன் கைகோர்க்க லபுச்சானே அரை சதம் விளாசினார். மேலும் அரை சதம் எடுக்க இருந்த நேரத்தில் டிராவிஸ் ஹெட் 49 ரன்களில் ஆட்டமிழந்தது பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இதனையடுத்து காமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மூன்றாவது ஓவரிலேயே தொடக்க வீரர் பென் டக் ஆட்டமிழந்தார்.
ஜாக் கிராலி சதம் :
ஆனால் இந்த போட்டியில் மொயின் அலி மூன்றவதாக களமிறங்கினார். ஆச்சரியமளிக்கும் வகையில் மொயின் அலி அற்புதமான அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு தேவையான அந்த தொடக்கத்தை கொடுத்தார். இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ஜாக் கிராலி வெறும் 93 பந்துகளில் சதம் விளாச இவருக்கு துணையாக ரூட் பக்கபாலமாக விளையாட ரூட் 85 ரன்களில் ஆட்ஸ்மிழந்தார். மேலும் அற்புதமாக விளையாடிய ஜாக் கிராலி 189 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதற்கு பிறகு வந்த பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களிலும் ஹார்ரி ப்ரூக் 61 அடித்து கொடுக்க அஸ்திரலிரேயாவின் ரன்களை கடந்தது முன்னேறியது இங்கிலாந்து. பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோவ் அதிரடி காட்டினார். ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது போல விளையாடிய அவர் வேகும் 81 ரன்களில் 99 ரன்களை குவித்தார். இறுதியில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 592 ரன்களை எடுத்துள்ளது.
Travis Head is completely bamboozled by the pace and bounce of Mark Wood! 🌪️
— England Cricket (@englandcricket) July 21, 2023
Four down. Six to go. #EnglandCricket | #Ashes pic.twitter.com/9d2B9U1Ewp
தடுமாறும் ஆஸ்திரேலியா :
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க பேட்ஸ்மேன்ஸ்கள் உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுக்க டேவிட் வர்னரும் அதனையடுத்து ஆட்டமிழந்து சொதப்பினார். பின்னர் வந்த ஸ்மித் 17 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க மார்னஸ் லாபுசாக்னே மற்றும் மிச்செல் மார்ஸ் தற்போது களத்தில் இருக்கின்றனர். ஆஸ்திரேலியா நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.