அனல் பறக்கும் ஆஷஸ் 5வது போட்டி – ஆஸ்திரேலியா சாதனை படைப்பதை தடுக்குமா இங்கிலாந்து?
இன்னும் சில நாட்களின் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அப்படி அந்த விறுவிறுப்புக்கு முன்பாக பல முடியமாக் போட்டிகள் நடிப்பெற இருக்கிறது. குறிப்பாக ஆசிய கோப்பை, இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ
இன்னும் சில நாட்களின் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அப்படி அந்த விறுவிறுப்புக்கு முன்பாக பல முடியமாக் போட்டிகள் நடிப்பெற இருக்கிறது. குறிப்பாக ஆசிய கோப்பை, இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்கள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்திற்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது நடைபெற்று வருகிறது.
இதுவரையில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும் 6 முறை போட்டியானது சமன் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வருடத்திற்காக ஆஷஸ் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா முதல் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக 2 வது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
இதனால் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் முறை மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது . செல்லபோனால் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வீரர்களே இந்த பாஸ் பால் முறை குறித்து மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்கள். அந்த நிலையில் தான் மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து ஒரு வழியாக வெற்றியை பதிவு செய்தது, இதனை மூலம் மீதி இருக்கும் 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் போதும் என்ற நிலைமை இருந்தத.
இதனையடுத்து இந்த தடாரின் 4வது போட்டியில் இங்கிலாந்து மிகவும் அற்புதமாக விளையாடியது, பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருவருமே மிகவும் சிறபபிக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க இவர்களுக்கு இடையே மூன்றவது போட்டியாளராக வைத்த மழை இங்கிலாந்து அணியின் வெற்றி கனவை தகர்த்தது. இதனால் போட்டி டிரா செய்யப்பட்டது. மேலும் இதனால் ஆஸ்திரேலியாவே மீண்டும் ஆஷஸ் கோப்பாயை தக்க வைத்து கொண்டது.
இதனையடுத்து கடைசி போட்டியானது 5 வது போட்டியானது நடிப்பெற்றது வருகிறது. என்னதான் ஆஸ்திரேலியா 2போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு இதனை போட்டியானது அவர்களுடைய தன்மான பிரச்னை. மறுபக்கம் இங்கிலந்து இந்த போட்டியில் தோல்வியை தழுவினால் பாஸ்பால் முறை குறித்தும் இங்கிலாந்து குறித்தும் பெறிய விமர்சனங்களை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வைக்கும். மேலும் 22 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா கோப்பாயை வென்றது என்ற சாதனையும் படைக்கும்.
இப்படிப்பட்ட நிலையில் தான் 5வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு செய்ய, தொடக்க வீரர்களாக களமிறங்கியா ஜாக் மற்றும் பென் டக்கட் ஆட்டமிழக்க அதற்கு பிறகு வந்த ஜோ ரூட்டும் ஆட்டமிழந்துள்ளார். இதனால் இங்கிலாந்து அணியானது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த செய்தியை எழுதும் வரையில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்களை குவித்துள்ளது.