அதிரவைக்கும் ஆஷஸ் 5வது போட்டி – 21 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் சாதனை படைக்குமா ஆஸ்திரேலியா?
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் டா
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் பொறுமையாக விளையாடிய இங்கிலாந்து 54.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களை எடுத்தது
இந்த போட்டியில் அஸ்திரேலியா ரன்களை எடுக்க வழக்கமான நேரத்தை விடமும் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இங்கிலாந்து அணி 54,4 ஓவர்களில் 283 ரன்களை அடிக்க ஆஸ்திரேலியா 103.1 ஓவர்களில் தான் 295 ரன்களை அடித்தது, மேலும் உஸ்மான் கவாஜா 157 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்களை அடித்தார். அதே போன்று மரன்ஸ் 82 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்கை நேற்று விளையாடியது. தொடக்கத்தில் பொறுமையாக விளையாடிய தொடக்க வீரர்களான டக்கட் 42(55) ரன்களில் ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடன் கூட்டு சேர்ந்த சாக் கிராலி அற்புதமான விளையாடி அரை சதம் எடுத்த நிலையில் 73(76) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதற்கு பிறகு வந்த ஜோ ரூட் டி20 போல பந்துகளை பறக்கவிட இந்த ஜோடி ரன்களை உயர்த்தியது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் 42(67) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை பின்னர் வந்த ஹாரி ப்ரூக் 7(6) ரன்களில் ஆட்டமிழக்க ஜானி போர்ஸ்டோவுடன் கைகோர்த்த ஜோ ரூட் அரை சதம் விளாசினார். இந்நிலையில் ஜோ ரூட் சதம் விளாசுவார் என்றிருந்த நிலையில் 91(106) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு வந்த பேட்ஸ்மென்கள் ஆட்டமிழத்தலும் ஜானி போர்டோ சிறப்பாக விளையாடி 78(103) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்திற்கு ஏற்பட்ட சிக்கல் :
இந்நிலையில் நேற்றைய நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 80 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை விளாசியது. இப்படிப்பட்ட நிலையில் இது இங்கிலாந்து அணிக்கு நல்ல ஸ்கோர் தான் ஆனால் இந்த போட்டியில் ஒருவேலை ஆஸ்திரேலிய சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை வீழ்த்தியது என்றால் 21 வருடங்களுக்கு பிறகு தங்களுடைய மண்ணில் இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் வீழ்த்தப்பட்டது என்ற மோசமான சங்கடம் இங்கிலந்து அணிக்கு உண்டாகும்.
மறுபுறம் ஒருவேளை இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பாடு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றது என்றால் இந்த தொடரானது 2-2 என டிராவாகும், ஆனால் ஆஸ்திரேலியா தற்போது நடந்துவரும் 5வது போட்டியை டிரா செய்ததது என்றாலும் அஸ்திரலியா 2-0 என்ற கணக்கில் இந்த தொடரை வெல்லும். இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிர்களின் கண்களும் தற்போது ஆஷஸ் போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.