இங்கிலாந்து அணிக்கு வந்த சோகம்” கைக்கு வந்த வெற்றியை தட்டிப்பரித்த மழை – மீண்டும் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா கையிலா?
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் போட்டியானது தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து டிக்ளர் கொடுத்தினால் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டவது போட்டியிலும் சில சர்ச்சைகள் எழுந்தது மேலும் அந்த போட்டியில் ஆஸ்திரேலியா பக்கத்தில் வந்து தோ
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் போட்டியானது தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து டிக்ளர் கொடுத்தினால் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டவது போட்டியிலும் சில சர்ச்சைகள் எழுந்தது மேலும் அந்த போட்டியில் ஆஸ்திரேலியா பக்கத்தில் வந்து தோல்வியை தழுவியது. இதனையடுத்து மூன்றவது போட்டியில் போராடிய இங்கிலாந்து அற்புதமான வெற்றியை பதிவு செய்து மீண்டும் களத்திற்குள் நுழைந்தது.
இந்த நிலையில் நான்காவது போட்டியானது கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா பின்னர் விக்கெட்டுகளை கொடுத்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து விளையாடிய இங்கிலந்து அணி யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். சொல்லப்போனால் 5 வீரர்கள் அரை சத்தங்களும் ஒருவரும் 189 ரன்களையும் விளாசினார். இதனால் ஆஸ்திரேலியா 592 ரன்களை விளாசியது.
இதனால் வெற்றி இங்கிலாந்து அன்னிக்கே அதிகம் என்றிருந்த நிலையில் இவர்களுக்கு இடையே மூன்றாவது அணியாக மழை குறுக்கிட்டது. இந்நிலையில் 4வது நாள் போட்டியானது மிகவும் தாமதமான ஆரம்பித்ததல் போட்டியும் தாமதமாக தொடங்கிகியது. இதனால் தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பும் கிடைத்தது. மேலும் இந்த நேரத்தில் தேவையான ஓய்வு எடுத்துக்கொண்ட லபுசேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 111 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருந்த போதிலும் அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்து ரன்களை சேர்த்தார்.இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்கை சமன் செய்ய 61 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மேலும் தற்போது களத்தில் மிட்செல் மார்ஸ் மற்றும் கேமரூன் க்ரீன் விளையாடி வருகின்ற்றனர். அதோடு நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்திருந்தது. நேற்றே மழை காரணமாக போட்டியானது பெருமளவு பாதிக்கப்பட்டது.
மேலும் நாளும் போட்டியானது மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளும் பெரும் தோல்வியை தழுவியது இதனால் 4வது போட்டியானது டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி அடித்து விட வேண்டும் என்றிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றமே கடைசியில் மிஞ்சியது. போட்டியானது டிரா ஆனதால் முந்தய வெற்றியாளரான ஆஸ்திரேலியாவே கோப்பையை தக்க வைக்கும்.
இந்நிலையில் 5வது மற்றும் கடைசி போட்டியானது வரும் ஜூலை 27ஆம் தேதி தொடங்குகிறது. ஒருவேளை இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றலும் ஆஷஸ் கோப்பையானது இங்கிலாந்திடமே இருக்கும் என்பதினால் வருத்தமடைந்துள்ளனர் ரசிகர்கள்.