2023 உலக கோப்பையில் இந்த அணிதான் வெல்லும்.. மோர்கன் கணிப்பு – என்ன சொன்னார் தெரியமா?
உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதனால் இந்திய அணி இதில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா இந்த போட்டியிலும் தோல்வியை தழுவியது என்றால் கண்டிப்பாக
உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதனால் இந்திய அணி இதில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா இந்த போட்டியிலும் தோல்வியை தழுவியது என்றால் கண்டிப்பாக பயிற்சியாளர், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் மீதம் இருக்கும் அணியின் வீரர்களின் மீது பெரிய விமர்சனங்கள் எழும்.
இந்நிலையில் இந்திய அணி உலக கோப்பைக்கு முன்னதாக சில ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இது கண்டிப்பாக இந்திய அணிக்கு நல்ல பயிற்சி ஆட்டமாக இருக்கும். அந்த வகையில் இந்தியா ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து உலக கோப்பையில் இந்தியா விளையாட இருக்கிறது என்பதினால் நல்ல பயிற்சி இந்திய அணிக்கு கிடைக்கும்.
இருட்னஹா போதிலும் இந்தியாவின் மைத்தனங்கள் குறித்த தகவல் பல வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியின் மூலம் தெரிவந்த காரணத்தினால், இந்திய அணிக்கும் இது சவாலான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஏற்கனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை குறித்து பலரும் பேசிவரும் வேளையில் இந்த முறை எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், 2019 சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டனுமான இயான் மோர்கன் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 உலகக் கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்த தனது கருத்தினை அளித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணி ஒரு நல்ல அணிதான் இருந்தாலும் என்னை பொறுத்தவரை இந்தியாவிற்கு அடுத்துதான் இங்கிலாந்து அணியை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
ஏனெனில் 2011-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதேபோன்று 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்றது. அதேபோன்று 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.எனவே 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் உலககோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இந்திய அணியே கோப்பையை வெல்ல அதிகமாக உள்ளதாக நான் கருதுகிறேன்.
அதேபோன்று இந்திய அணிக்கு அடுத்து இங்கிலாந்து அணி இந்த கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு இந்த தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகளை நான் குறிப்பிட வேண்டுமென்றால். இந்தியா இங்கிலாந்து அணியுடன் சேர்த்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று கூறுவேன் என்றார் இயான் மோர்கன்.