6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் சென்றாலும் பரவாயில்லை என்று தான் நினைத்தேன் – சூரியகுமாரை வீழ்த்தியது குறித்து பேசிய மோஹித் சர்மா.
ஐபிஎல் 2023 இறுதி கட்டத்தை நோக்கி நெருங்கி விட்டது. அதில் நேற்று மிகவும் பரபரப்பான குவாலிஃபையர் 2 போட்டி நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஷுப்மன் கில்லின் அபார சதத்தால் 233 ரன்கள் குவ
ஐபிஎல் 2023 இறுதி கட்டத்தை நோக்கி நெருங்கி விட்டது. அதில் நேற்று மிகவும் பரபரப்பான குவாலிஃபையர் 2 போட்டி நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஷுப்மன் கில்லின் அபார சதத்தால் 233 ரன்கள் குவித்தது. 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை.
இஷானின் காயத்திற்குப் பிறகு விளையாட வந்த நேஹல் வதேராவும் பொறுமையாக விளையாடினார். இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ், மும்பை அணிக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவர் ஆட்டமிழந்த நிலையில் மும்பை அணி அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியா தழுவியது.
இந்நிலையில் மும்பை இந்த தோல்வியை தழுவ முக்கியமான காரணம் சுப்மன் கில் மற்றும் மோஹித் சர்மா தான்.ஏனென்றால் என்னதான் குஜராத் அணி அதிக ரன்களை அடித்திருந்தாலும். மும்பை அணியிடம் பல பெரிய ஹீட்டர்கள் இருக்கின்றனர். இதனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு கட்டத்தில் SKY சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது மோஹித் ஷர்மா சரியாக அவரை அவுட் செய்தார். இதனால் குஜராத் அணிக்கு வெற்றி சுலபமானது. இப்படிப்பட்ட நிலையில் தான் மோஹித் சர்மா இந்த வெற்றி குறித்து பேசினார்.
மோஹித் சர்மா கூறியது :
அவர் கூறுகையில் “அதிஷ்டம் இருந்ததால் இந்த விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. இந்த மைத்தனத்தில் பந்து ஸ்கிட் ஆகி சென்றதினால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. திலக் மற்றும் சூரிய தொடர்ந்து ஆகியிருந்தால் போட்டி கைநழுவி போயிருக்கும். நான் சூர்யாவுக்கு பந்துவீயும் போது எந்விதமான புதிய திட்டத்துடனும் செல்லவில்லை. அதனை தான் நாங்கள் டீம் மீட்டிங்கிலும் நாங்கள் அதைத்தான் பேசியிருந்தோம்.
ஏனென்றால் சூரியகுமார் யாதவிற்கு எதிராக எதையாவது புதிதாக முயற்சி செய்தால் அதுவே அவருக்கு சாதகமாகிவிடும். எனவே அவருக்கு எதிராக லென்த் பந்துகளை மட்டுமே வீச நினைத்தேன். அவர் ஆறு சிச்கர்கள் அடித்தாலும் பரவாயில்லை என்று நினைத்தேன். ஏனெனில் லென்த் பந்துகள் சூரிய குமார் யாதவிர்க்கு அடிக்க கடினமாக இருக்கும் என்று தெரிந்து கொண்டோம்.
அந்த போட்டி அதோடு முடியப்போவதில்லை. ஆனால் சூர்யாவின் விக்கெட்டை எடுத்தது நாங்கள் மீண்டும் போட்டியில் தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தது. அவரின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு நிம்மதியாக இருந்தது. எனக்கு கடைசி விக்கெட்டில் தான் பைனலுக்கு சென்றுவிட்டோம் என்று தோன்றியது. ஏனென்றால் கடந்த போட்டிகளில் அப்படியொரு விஷயம் நடந்தது. எனவே கடைசி ஓவர் வரையில் போட்டி முடியவில்லை என்று எனக்கு தெரியும் என்றார் மோஹித் ஷர்மா.