முக்கியமான போட்டியில் இப்படியா செய்வீங்க? விளாசும் முன்னாள் வீரர்கள்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியாது நேபாளத்துக்கு எதிராக 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் எதிர்பார்த்தது போலவே அரை மணி நேரத்தில் வந்த மழை உடனடியாக ஒதுங்கிய நிலையில் 11 (22) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை பெற்ற கேப்டன் ரோகித் சர்மாவை 5வது ஓவரின் கடைசி பந்தில் ஷாஹீன் அப்ரிடி க்ளீன் போல்ட்டாக்கினார்.
அதை விட அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 4 (7) ரன்களில் காலி செய்த அவர் எதிர்பார்த்ததை போலவே இந்தியாவின் 2 துருப்புச் சீட்டு வீரர்களை ஆரம்பத்திலேயே புதிய பந்தை ஸ்விங் செய்து அவுட்டாக்கி பாகிஸ்தானுக்கு அபாரமான துவக்கத்தை பெற்றுக் கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 14 (9) ரன்களில் அவுட்டானதால் 51/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா இந்த போட்டியில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் முன்னதாக இந்த போட்டியில் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஷமி அதிரடியாக நீக்கப்பட்டு பேட்டிங் ஆழத்தை அதிகரிப்பதற்காக ஷார்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். ஆனால் அது மிகப்பெரிய தவறு என்று சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் “ஷமியை விட தாகூர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து விடுவாரா? இது போன்ற ஒரு மைதானத்தில் ஷமியை உள்ளே கொண்டு வருவதற்காக நான் பேட்டிங் ஆழத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன். இந்த மைதானத்தில் இந்தியா 3 தரமான வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியிருக்க வேண்டும். இது அணியில் யாருக்கும் பாதுகாப்பான இடமில்லை என்பதை காட்டுகிறது. ஒருவேளை வேண்டுமானால் நீங்கள் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அவரை கொண்டு வந்திருக்கலாம் என்றார்.
மேலும் இந்த விஷயம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹெய்டன் கூறுகையில் ” இதனை நான் 100% ஏற்றுக்கொள்கிறேன். ஷமி நிச்சயம் இந்த அணியில் விளையாடியிருக்க வேண்டும். அவர் மட்டும் தான் இப்பபோட்டியில் இந்திய அணியில் குறையாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.