“இந்த நாளை நாங்கள் நீண்ட நாட்களுக்கு மறக்க மாட்டோம்” – வெற்றிக்குப் பின் உற்சாகமாக பேசிய பாட் கம்மின்ஸ்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்த
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது . ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து நேற்று இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார்.
இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும் விராட் கோலி 54 ரன்களுக்கும் ரோஹித் ஷர்மா 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வூட் தலா 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
241 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் அதன் பின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி இந்திய அணியை எளிதாக இறுதிப் போட்டியில் வென்றனர். ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 241 ரன்களை குவித்து வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களும் மார்னஸ் லாபுசாக்னே58 ரன்களும் மார்ஷ் 15 ரன்களையும் அடித்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 ஒரு விக்கெட்டையும் மட்டுமே வீழ்த்தி இருந்தன. எனவே ஆஸ்திரேலியா அணி 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. வெற்றி கூறித்து பாட் கம்மின்ஸ் சில கருத்துக்களை தெரிவித்து விருந்தார்.
பாட் கம்மின்ஸ் கூறியது
கடைசியாக எங்களால் முடிந்ததைச் செய்தோம் என்று நினைக்கிறேன். இரண்டு பெரிய மேட்ச் வீரர்கள் முன்னேறி எங்கள் வெற்றிக்கு வழி வகுத்தனர். இன்று நாங்கள் துரத்துவது நல்ல இரவு என்று நினைத்தோம், துரத்துவது எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆடுகளம் நான் நினைத்ததை விட மெதுவாக இருந்தது மற்றும் குறிப்பாக ஸ்பின் இல்லை மற்றும் நாங்கள் பந்துவீச்சுகளை நன்றாக வீசினோம். பவுன்ஸ் கொண்ட மெதுவான விக்கெட்டில், லெக் சைடில் ஓரிரு வீரர்களை வைத்து கேட்ச்களை பிடித்து வைத்து இரண்டு முடிவுகளை எடுத்தோம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வீரர்கள் சிறப்பாக விளையாடினர். எங்களிடம் ஒரு வயதான பக்கம் உள்ளது, ஆனால் எல்லோரும் தங்களைத் தாங்களே சுற்றிக் கொள்கிறார்கள். அவற்றை 240 ஆக வைத்திருப்பதன் மூலம் சுருக்கப்பட்டுள்ளது. விளையாடுவது அருமையாக இருந்தது மற்றும் இந்தியாவில் உள்ள ஆர்வம் நிகரற்றது. நீங்கள் சென்று உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். நீங்கள் காத்திருக்க முடியாது. இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு இது ஒரு ஷிப்ட். தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தனர் மற்றும் இது அனைவரிடமிருந்தும் மொத்தமாக வாங்கப்பட்டது. இந்த ஆண்டை நாம் நீண்ட காலமாக நினைவில் கொள்வோம். என்றும் அவர் கூறியிருந்தார்.