பந்துவீச்சு சரியில்ல.. பேட்டிங் மட்டும்தான் ஒரே வழி – ஆர்சிபி பௌலிங் குறித்து மனம் திறந்த பாப் டூப்ளசிஸ்

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது.

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் ஒரே ஒரு வெற்றியை தான் பெற்று இருந்தார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிக்கும் இருந்தது. அதில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன் படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி தான் விளையாடி வந்தது. இருப்பினும் மிடில் ஆர்டரில் அவர்கள் சற்று தடுமாறி விளையாடவே ரன்கள் மெதுவாக அந்த இடத்தில் குறைந்தது. ஆனால் ஆதன் பின் தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே பெங்களூரு அணி 20வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்து இருந்தது. ஆரம்பத்தில் விராட் கோலி அதிக அளவில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்3ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அறிமுக வீரர் வில் ஜாக்ஸ் 8 ரன்னில் வெளியேற அதன் பின் வந்த படிதார் தனது அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 26 பந்துகளில் 61 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதன் பின் டு பிளசிஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் எந்த வீரரும் இரண்டிலக்க ரன்களை கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 53 ரன்களை அவர் அடித்து இருந்தார். அவரது ஆட்டம் காரணமாக தான் பெங்களூரு அணி 196 ரன்களை குவிக்க முடிந்தது.

மும்பை அணியின் தொடக்கம் முதலே பேட்டிங் சிறப்பாக இருந்தது. எனவே அவர்கள் 197 இலக்கை 15.3 ஓவர்களிலே அடித்து முடித்து விட்டனர். அதில் வந்த அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களும் ரோஹித் ஷர்மா 24 பந்துகளில் 38 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் ஹர்திக் பாண்ட்டியா 6 பந்துகளில் 21 ரன்களையும் திலக் வர்மா 10 பந்துகளில் 16 ரன்களையும் அடித்து இருந்தனர். பெங்களூரு அணி இது போன்ற மோசமான பந்து வீச்சாளர்களை வைத்து கொண்டால் 196 அல்ல 296 ரன்களை அடித்து இருந்தாலும் பெங்களூரு அணியால் வெற்றி பெற முடியாது.

இந்நிலையில் போட்டி முடிந்த பேசிய பெங்களூரு அணி டூப்ளசிஸ் கூறுகையில் :இந்த நேரத்தில் பேட்டிங் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது நாங்கள் 220 ரன்களுக்கு ஒரு வாய்ப்பைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று உணர்கிறோம். பந்துவீச்சு கண்ணோட்டத்தில் பார்த்தால் எங்களிடம் அதிக ஆயுதங்கள் இல்லை. எனவே துரதிர்ஷ்டவசமாக அந்த அழுத்தம் பேட்டர்களுக்கு வருகிறது. எங்களது நம்பிக்கையையும், அனுபவத்தையும் பயன்படுத்தி அதிக ரன்களை எதிரணிக்கு எதிராக வைப்பதே இந்த வெல்வதற்கு ஒரே வழி

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வந்து விளையடைய விதத்தை பாராட்ட வேண்டும். அது எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்தது. குறிப்பாக பவர்பிளேயில் எங்கள் பந்துவீச்சாளர்களை நிறைய தவறுகளைச் செய்ய வைத்தது. உள்ளே வந்த எவரையும் நீங்கள் பார்க்கலாம். சுலபமாக பேட்டிங் செய்த்தனர். இதனை நாங்கள் முதல் இன்னிங்ஸில் பேசினோம். இங்கே பனி பெரிதானது போல் இருந்தது, அதனால் நாங்கள் 215 அல்லது 220 ரன்களை எடுத்திருக்க வேண்டும் என்றார் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூப்ளசிஸ்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை