நடந்தது ENG vs SA போட்டி.. ஒலித்தது “சச்சின் சச்சின்” தரமான சம்பவம் செய்த ரசிகர்கள்.

மும்பையில் உள்ள சின்னமான வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமையன்று ICC கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் போட்டியானது நடந்தது. இந்த போட்டியின் 20வது போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதின. இப்போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சா

By ·

மும்பையில் உள்ள சின்னமான வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமையன்று ICC கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் போட்டியானது நடந்தது. இந்த போட்டியின் 20வது போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதின. இப்போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க அணியின் ரசிகர்கள் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தியதை காட்டிலும் போட்டியின் போது கூட்டத்தில் ஒரு இதயத்தைத் தூண்டும் தருணமும் காணப்பட்டது. அதாவது கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கோஷமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெண்டுல்கர் மும்பையில் பிறந்தார் மற்றும் அவரது சொந்த ஊரில் நிறைய கிரிக்கெட் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 இல் இந்தியா இலங்கையை வீழ்த்தி இரண்டாவது ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அதே இடத்தில் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் தனது கனவையும் அவர் நனவாக்கினார். எனவே, நகரத்தில் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் அவரது பெயரை உச்சரித்து அந்த பெரியவரின் பாரம்பரியத்தை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறுவதில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியை பொறுத்தவரையில் “டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பௌலிங் செய்ய விரும்பியது. ஆனால் அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 5௦ ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 400 ரன்களை குவித்தது. தென்னாபிரிக்கா அணியின் சார்பில் கிளாசென் 109 ரன்களும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 85 ரன்களும், ஜான்சன் 75 ரன்களையும் குவித்தனர்.

இங்கிலாந்து அணியின் பௌலிங்கை தென்னாபிரிக்கா அணி நான்கு பக்கமும் சிதற அடித்தது. 400 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். 1௦௦ ரன்கள் இருந்த நிலையிலே 8 விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து அணி 22 ஓவர் முடிவில் 1௦ விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் விதியசாரத்தில் தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பில் மார்க் வூட் 45 ரன்களும், கஸ் அட்கின்சன் 35 ரன்களும் ஹாரி ப்ரூக் 17 ரன்னிலும் ஜாஸ் பட்லர் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் மற்றும் லுங்கி என்கிடி தலா இரண்டு விக்கெட்டுகளையும் ராபாடா மற்றும் மகாராஜ் தலா 1 விக்கெட்டையும் எடுத்து இங்கிலாந்து அணியை சுருட்டினர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை