ரோஹித் ரோஹித் என முழக்கமிட்ட ரசிகர்கள்… விட்டேன் பாரு ஒரு ஓட்டம் என ஓடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா. இணையத்தில் பரவும் வீடியோ:

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்தது. இந்தப் போட்டியானது ஹைதர

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்தது. இந்தப் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இண்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பம் முதலே சோதனையாக முடிவு வரை இருந்தது. 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்களை குவித்தது. இது ஐபிஎல் வரலாறு மிக அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதலில் மயங்க அகர்வால் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் மற்றொரு பக்கம் நின்று கொண்டிருந்த ட்ராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும் அடித்து இருந்தார்.

மும்பை அணிக்கு SRH அணி 278 ரன்களை இலக்காக் கொண்டுள்ளது. மும்பை அணியின் பந்துவீச்சு பற்றி சொல்ல வேண்டுமானால் மிகவும் மோசமானதாக இருந்தது. இதில் அறிமுக வீரர் மபாகா நான்கு ஓவர்களில் 66 ரன்களை அவர் விட்டுகொடுத்து இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்த மும்பை அணியும் அவர்களது அதிரடியை காட்ட தொடங்கினர். இருப்பினும் மும்பை அணியால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. எனவே மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 64 ரன்களை அடித்து இருந்தார். இதில் இரு அணிகளும் சேர்த்து மாபெரும் வரலாற்று சாதனையை படைத்து இருந்தது. இந்த தோல்வி மேலும் ஹர்திக் பாண்டியா மீது ஆழுதத்தை தான் ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கூட சிறப்பாக செயல்படவில்லை எனவே ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்ற வீடியோவை கூட நாம் பார்த்து இருப்போம்.

மும்பை அணியின் தோல்விக்குப் பிறகு அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பேசி இருந்தனர். அதன் பின் ஆகாஷ் அம்பானி தற்போது மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவர் அங்கு இருந்து சென்ற உடன் ஹர்திக் பாண்டியாவும் வேகமாக அங்கிருந்து ஓடினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ரோஹித் ரோஹித் என முழக்கமிட இன்னும் வேகமாக அவர் அங்கு இருந்து ஓடிவிட்டார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை