இந்த வீரரை அணியில் இருந்து வெளியேற்றுங்கள் – ராஜஸ்தானின் தோல்வியால் ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்.
ஐபிஎல் 2023ல் 26 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது. அது சரியான முடிவு என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிரூபித்தது. முத
ஐபிஎல் 2023ல் 26 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு செய்தது. அது சரியான முடிவு என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிரூபித்தது. முதல் பாதியில் விக்கெட்டுகளை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்கள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பெரிய ஸ்கோரை கொடுக்க விடாமல் தடுத்தனர்.
இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு லக்னோ அணியால் முதல் இன்னிங்சில் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் போது லக்னோ அணி சார்பாக மியர்ஸ் 51 ரன்களும். கேப்டன் கே.எல்.ராகுல் 39 ரன்களையும் எடுத்தனர். இரண்டு பேட்ஸ்மேன்களுக்கிடையில் 82 ரன்களின் தொடக்க பார்ட்னர்ஷிப்பும் இருந்தது, ஆனால் அதன் பிறகு எந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட முடியவில்லை.
இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். யஷஸ்வி ஆட்டமிழந்த பிறகு ராஜஸ்தான் இன்னிங்ஸ் தடுமாறியது. எந்த பேட்ஸ்மேனும் கிரீஸில் நிலைக்க முடியவில்லை. இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்த தோல்வியினால் ரசிகர்கள் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். அதாவது விக்கெட்டுகள் விழுகின்றன நேரத்திலும் கடைசி ஓவரில் ரன்கள் தேவைப்படும் நேரத்திலும் படிக்கள் 21 பந்துகளில் 26 ரன்களும் மற்றும் ரியான் பராக் 12 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே அடித்தனர். ஆனால் அதிக ரன்கள் தேவைப்படும் நேரத்தில் இவர்கள் ஏன் பெரிய ஷாட்டுகளுக்கு முயற்ச்சிக்க வில்லை என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுதிக்கிறது.
Before Trolling Riyan parag , Haters Remember that He is the Best batter of Rajasthan royals after Holder, Padikkal , Ashwin , boult, sandeep , Chahal and zampa 💗💗#RRvsLSG pic.twitter.com/5ULpRUlNCf
— Harsh (@royals_hu) April 19, 2023
அதோடு ஆல் ரவுண்டர் அஸ்வின் கடைசி 2 பந்துகளில் தான் விளையாட வந்தார். இவர் இதற்கு முன்னர் இதே போன்ற சூழ்நிலையில் 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து கொடுத்தார். அது ராஜஸ்தான் வெற்றியடைய உதவியாக இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை ஏன் பேட்டிங் செய்ய அனுப்பவில்லை என்றும் ரியான் பராக் விளையாட்டு சரியில்லை என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.