வீடியோ : பைனலுக்கு நீங்கதான் சரியான ஆளுங்க – அமெரிக்க குத்துசண்டை வீரர் பாராட்டு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியானது வரும் நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இந்திய அணி இந்த உலக கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட கண்டிராமல் பலம் வாய்ந்த அணியாகவும் மற்றொன்று பக்கம் ஆஸ்திரேலியா அணியும் இரு தோல்விகளை தழுவி இருந்தாலும் அதன் பின் வந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஞாயிறு அன்று இந்தியாவை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும் ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இந்தியா தங்களுடைய சொந்த நாட்டில் விளையாடுவதினால் அங்குள்ள காலநிலை, சூழ்நிலை, ஆடுகளத்தில் தன்மை என அனைத்திலும் தரவாக இருப்பதினால் இந்தியாவுக்கே வெற்றி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க குத்து சண்டை வீரர் ஃபிலாய்ட் மேவெதர் உலக கோப்பை இறுதி போட்டி குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உலக கோப்பை இறுதி போட்டிக்கு செல்ல மிகவும் தகுதியான அணி நீங்கள் என்று கூறியுள்ளார் அவர். அந்த வீடியோ பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.
Flyod Mayweather congratulating team India on reaching the Final.pic.twitter.com/SdhO441LA5
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 17, 2023
மேலும் இந்திய அணி குறித்து பேசிய ரவி சாஸ்திரி கூறுகையில் “உலகக் கோப்பையை இந்தியா வெல்லும். அவர்கள் இறுதிப் போட்டியில் மிகவும் பலமான அணியான தொடங்கினார்கள். அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். நிம்மதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டில் விளையாடுகிறார்கள், இது மிகவும் அனுபவம் வாய்ந்த பக்கமாகும், மேலும் அவர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
இந்தியா பொறுமையாகவும் அமைதியாக இருக்க வேண்டும், அழுத்தத்தை கையாளுதலில் ஊறி இருக்க வேண்டும். இறுதிப் போட்டி என்பதால் நீங்கள் இந்தியா அதிக உற்சாகமாக இருக்க விரும்பவில்லை. தங்களால் என்ன முடியும் என்பதை இந்தியா அறிவீர்கள், நல்ல விஷயம் என்னவென்றால், இந்த அணி ஒன்று அல்லது இரண்டு வீரர்களைச் சார்ந்து இல்லை. எட்டு அல்லது ஒன்பது வீரர்கள் ஆட்டத்திற்குப் பிறகு விளையாடுகிறார்கள், அது ஒரு சிறந்த அடையாளம் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.