12 வருடத்திற்கு கொல்கத்தா அணியிடம் சொந்த மைதானத்தில் மண்ணை கவ்விய மும்பை அணி.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை உள்ள வாங்கடே மைதானத்தில் பலப்பரீட்சை ச
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை உள்ள வாங்கடே மைதானத்தில் பலப்பரீட்சை செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும் இருந்து வருகிறது.
மும்பை அணி கிட்ட தட்ட ப்ளே ஆப்ரேசிலிருந்து வெளியேறிவிட்டது என்று சொல்லலாம் . இன்றைய போட்டியிலும் அவர்களின் மோசமான பேட்டிங் வெளிப்பட்டது. அவர்கள் அதே வழக்கமான பாணியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை தோல்வியை தழுவி இருந்தனர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது படி அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக அமைந்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தனர்.
தொடக்க வீரர்கள் வந்த வேகத்திலேயே மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கட்டு இருந்து வெளியேறினார். ஆனால் மிடில் ஆர்டரில் வந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே இணைந்து அணிக்கு ஒரு நல்ல ரங்களை சேர்த்துக் கொண்டு இருந்தனர் 20 ஓவர்கள் முடிவில் 19.5 அவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் 169 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது.
அதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 52 பந்துகளில் 70 ரன்களும் மனிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களையும் அடித்திருந்தனர் மும்பை அணையின் பந்துவீச்சாளர்கள் சார்பில் துஷாரா மற்றும் பும்ரா தலா மூன்று விக்கெட்டுகளையும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டையும் சாவ்லா ஒரு விக்கெட்டையும் முடித்து இருந்தனர். 170ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் மட்டும் தனியாக போராடி 56 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். அதன் பின் இருந்த வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை எனவே மும்பை அணி 18.5 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பை அணி கிட்ட தட்ட வெளியேறியது என்று சொல்லலாம்