இது போன்ற வடிவத்தில் பார்ம் என்பது தற்காலிகமானது தான். நாங்கள் அவரை நம்புகிறோம் – சஞ்சு சாம்சன்

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் மும்பை அணி பந்து ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் மார்ச் 33 முதல் இந்தியாவில் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் மும்பை அணி பந்து ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இரண்டாவது போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் மோதியது. இந்த இரண்டு அணிகளும் இதற்க்கு முந்தைய போட்டியில் வற்றி பெற்று இருந்தது.

அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ன்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்தது என்று சொல்லலாம். லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக ஆரம்பித்து இருந்தனர். ஆனால் அதன் பின் லக்னோ அணியின் மிடில் ஆர்டர்ரில் வந்த வீரர்களும் அதே போல் கேப்டன் கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து இருந்தனர். இருப்பினும் ராஜஸ்தான் அணியின் சிறப்பான ஆட்டத்தால் அவர்கள் எளிதாக வெறி பெற்று விட்டனர்.

20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை அடித்து இருந்தது. இதில் தொடக்க வீரர் டி காக் எட்டு ரன்களும் அதன் பின் வந்த ஸ்டோனிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தையே அளித்து இருந்தனர். இதில் அதிக பட்சமாக கே.எல்ராகுல் 76 ரன்களும் தீபக் ஹூடா 50 ரன்களையும் அடித்து இருந்தார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் சந்தீப் ஷர்மா இரண்டு விக்கெட்டுகளையும் போல்ட், அவேஷ் கான் மற்றும் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.

அதன் பின் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த இலக்கை 19 வது ஓவர்கள் முடிவிலேயே எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.இதில் கேப்டன் பொறுப்பிற்கு ஏற்றார் போல் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி இருந்தார். அதில் அதிகபட்சமாக சஞ்சு சம்சன் 71 ரன்களும் ஜுரேல் 52 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்த வெற்றிக்கு காரணம் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு தொடக்கத்தை அளித்து இருந்தார்கள். லக்னோ அணி சார்பில் அமித மிஸ்ரா, ஸ்டோய்னிஸ் மற்றும் யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.

வெற்றி குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், விக்கெட்டுகளுக்குப் பின்னால் இருப்பது நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. புதிய பந்தில் சில ரன்கள் நன்றாக வந்தது, பின்னர் பேட்டிங் செய்ய ஒரு நல்ல விக்கெட் இருந்தது. பவர்-பிளேயில் வந்து ஒரு ஓவரை வீசியவர்கள் ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறார்கள். திரைக்குப் பின்னால் நிறைய திட்டமிடல் சரியாக இருந்தது. இன்னிங்ஸின் தொடக்கமும் முடிவும் நன்றாக இருந்தது. மிடில் ஓவர்களில் சில ரன்களை கொடுத்தோம்.

இந்த வடிவத்தில் பார்ம் என்பது தற்காலிகமானது. டெஸ்டில் ஜூரெலைப் பார்த்திருக்கிறோம். நாங்கள் அவரை நம்புகிறோம். அவர் வலைகளில் சில நேரங்களில் ஒரு மணி நேரம் மற்றும் இரண்டு மணி நேரம் பேட்டிங் செய்துள்ளார். நாங்கள் உண்மையிலேயே நன்றாகச் செய்து வருகிறோம். நாமும் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிதான். நாம் செயல்முறையை சரியாக வைத்திருக்க வேண்டும். குழு கூட்டங்களில், செயல்முறைகளை டிக் செய்வது பற்றி பேசுகிறோம். எங்களுக்கு ஒரு நேரத்தில் ஒரு விளையாட்டு.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை