தோனி இதற்க்கு தான் ரொம்ப கோபம் வரும். தோனி குறித்து ரகசியத்தை பகிர்ந்த சென்னை அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன்.

சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி சுனில் கவாஸ்கர் கங்குலி போன்றவர்களை இந்தியா இதுவரை உருவாக்கிய முக்கிய வீரர்களில் எம் எஸ் தோனியும் ஒருவர். அவர் இதுவரை இந்திய அணிக்காக மூன்று ICC பட்டங்களை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வாங்கி தந்துள்ளார். இவர் ஐசிசி கோப்பைகள் மட்டுமல்லாமல் ஐபிஎல்

By ·

சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி சுனில் கவாஸ்கர் கங்குலி போன்றவர்களை இந்தியா இதுவரை உருவாக்கிய முக்கிய வீரர்களில் எம் எஸ் தோனியும் ஒருவர். அவர் இதுவரை இந்திய அணிக்காக மூன்று ICC பட்டங்களை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வாங்கி தந்துள்ளார். இவர் ஐசிசி கோப்பைகள் மட்டுமல்லாமல் ஐபிஎல் கோப்பைகளையும் அவர கேப்டனாக இருந்து சென்னை அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று தந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

எம் எஸ் தோனி தன்னுடைய பாணியில் எப்போதும். கோபப்படாமல் நிதானமாக யோசித்து இந்தியா அணியை மட்டுமல்லாமல் சென்னை ஐபிஎல்லில் சென்னை அணியை பலமுறை வெற்றி பெற வைத்துள்ளார். தோனி எப்பொழுது மைதானத்தில் களம் இறங்கி விட்டால் அவருடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார். ஆனால் அவர் தற்பொழுது சில வருடங்களாகவே அதனை அவ்வப்போது வெளிக்கொண்டு இருக்கிறார். தோனிக்கு வயசானாலும் அவர் வேகத்திற்கு ஓடுவது என்பது இன்று இருக்கும் இளம் வீரர்களுக்கும் சவாலாக இருந்து வருகிறார்.

தோனிக்கு எதிராக மைக்கேல் ஹஸ்ஸி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றிருப்பார் என்றும தோனி எதற்காக கோபம்படுவார் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். உலக கிரிக்கெட்டில் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுபவர்களில் ஒருவராக தோனி என்றும் பலர் கூறி வந்தனர். குறிப்பிடத்தக்க வகையில், அவர் ஒருமுறை இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விட 12 வயது மூத்தவராக இருந்தாலும், 100 மீட்டர் ஓட்டத்தில் தோனி தான் வெற்றி பெற்று இருந்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று ஆண்டுகள் எம்எஸ் தோனியுடன் மேத்யூ ஹைடன் விளையாடினார். 2010ல் சென்னை தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றபோது அவர் அணியில் இருந்தார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை எதிர்கொள்வது மிகவும் சவாலானதாக இருந்ததாக மேத்யூ ஹைடன் கூறினார்.

சென்னை அணியின் முன்னாள் வீரரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தோனி குறித்து சில கேள்விகளை எழுப்பப்பட்டது. அப்பொழுது தோனி எதற்காக மிகவும் கோபப்படுவார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த மேத்யூ ஹைடன் தோனிக்கு பில்டிங் செய்யும் போது மோசமாக செயல்பட்டால் தோனி மிகவும் கோபப்படுவார் என்றும் ஃபீல்டிங்கில் கோட்டை விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் என்றும் அவர் அவர் கூறி இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை