அவ்ளோ லேட்டா வந்து என்ன சாதிக்க போறிங்க ?? ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை உள்ள வாங்கடே மைதானத்தில் பலப்பரீட்சை
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 51வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை உள்ள வாங்கடே மைதானத்தில் பலப்பரீட்சை செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திலும் இருந்து வருகிறது.
19.5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் 169 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 52 பந்துகளில் 70 ரன்களும் மனிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களையும் அடித்திருந்தனர் மும்பை அணையின் பந்துவீச்சாளர்கள் சார்பில் துஷாரா மற்றும் பும்ரா தலா மூன்று விக்கெட்டுகளையும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டையும் சாவ்லா ஒரு விக்கெட்டையும் முடித்து இருந்தனர்.
170ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் மட்டும் தனியாக போராடி 56 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். அதன் பின் இருந்த வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை எனவே மும்பை அணி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பை அணியின் தோல்வி குறித்து ஷேவாக் கூறுகையில், ” ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் தாமதமாக வந்தார்கள். தாமதமாக வந்து நீங்கள் என்ன சாதித்தீர்கள்? பல பந்துகள் மீதம் இருந்தன, அது எல்லாம் வீணாக பொய் இருந்தது. நீங்கள் முன்னதாகவே வந்திருக்கலாம், அல்லது நீங்கள் முன்னதாகவே விளையாட்டை முடித்திருக்கலாம். சேஸ்ஸின் போது அவர்களுக்கு என்ன ஆகுமோ தெரியவில்லை… ஹர்திக் பாண்டியா 7 ரன்னிலும், டிம் டேவிட் 8 ரன்னிலும் ஆடினர். என்ன செய்தார்கள் என்று புரியவில்லை.
இந்த வீரர்கள் முதலில் வந்தால் அவுட் ஆகிவிடும் அளவுக்கு மோசமானவர்களா? ஹர்திக் பாண்டியா ஜிடி கேப்டனாக இருந்தபோது தொடர்ந்து 4 ரன்களில் பேட்டிங் செய்தார். இங்கு என்ன நடந்தது? அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகவும் குறைவாக வருவது என்னை குழப்புகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.