இந்த மனுஷன் கூடயா கோலி சண்ட போடராரு – அன்று கோலியை கௌரவித்த கம்பீர் – வைரலாகும் பழைய வீடியோ.

ஐபிஎல் 2023 தொடரின் 43 வது ஆட்டத்தில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் லக்னோ அணியை அவர்களது மைதானத்தில் வைத்தே பெங்களூரு அணி வெற்றிபெற்றது. ஆனால் அந்த வெற்றியை விட ஒரு பெரிய நிகழ்வு அதற்கு பிறகு நடந்தது அதுதான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமான வைரலாகி வருகிறது. அதாவத

By ·

ஐபிஎல் 2023 தொடரின் 43 வது ஆட்டத்தில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் லக்னோ அணியை அவர்களது மைதானத்தில் வைத்தே பெங்களூரு அணி வெற்றிபெற்றது. ஆனால் அந்த வெற்றியை விட ஒரு பெரிய நிகழ்வு அதற்கு பிறகு நடந்தது அதுதான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமான வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2013 ஐபிஎல் முதலே விராட் மற்றும் கம்பீருக்கு இடையே பலவிதமான வாக்குவாதங்கள் இருந்து வருகிறது.

அது நேற்று நடந்த ஆட்டத்தில் இன்னும் அதிகமாகி கோலி மற்றும் கம்பீருக்கு இடையே பெரும் வாக்குவாதம் உருவாகியது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்காக கோலி, கம்பீர், நவீன் உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம். இப்படி இவர்கள் இருவரும் பல வருடங்களாக சண்டை போட்டாலும் கடந்த 2009ல் ஒரு மனதை கவரும் நிகழ்வு நடந்தது. அந்த விடாயே தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

2009/10 இலங்கை சுற்றுப்பயணம் :

அதாவது கடந்த 2009 ஸ்ரீலங்கா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த போது 4வது ஓடிஐ போட்டி ஈடன் கார்டனில் நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை 315 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய இந்தியா வெற்றி பெறுவதற்கு 316 ரன்கள் தேவைப்படும் நிலையில் போட்டியின் தொடக்கத்திலேயே சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் என்ற இந்தியாவின் இரு தூண்கள் தகர்க்கப்பட்டன.

பட்டய கிளிப்பிய பாட்னர்ஷிப் :

ஆனால் அதற்கு பிறகு களமிறங்கிய கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் அதிகரித்தனர். சொல்லப்போனால் விராட் மற்றும் கம்பீர் இருவரும் இணைந்து 234 ரன் பார்ட்னெர்ஷிப்பை உருவாக்கினார். அந்த போட்டியில் கம்பீர் 150 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் விராட் கோலி 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும் இருவரும் சேர்ந்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்கள்.

மனதை கவர்ந்த தருணம் :

அந்த ஆட்டத்தில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செத்தார். ஆனாலும் கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், கம்பீர் பெருந்தன்மையாக தனது கோப்பையுடன் பரிசுத் தொகை மற்றும் ஒரு மொபைல் ஃபோனை இளம் விராட் கோலிக்கு வழங்கினார். இது ஒரு நம்பமுடியாத செயல் தான் தற்போது உள்ள சூழ்நிலையில். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி விருதை வாங்கும் போது அவருக்கு கைதட்டி உற்சாகப்படுத்தினார் கம்பீர். ஆனால் அப்படியிருந்தவர்கள் தான் தற்போது இப்படி மாறிவிட்டார்கள்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை