அந்த போட்டியில் இந்தியா வெல்ல ஹர்பஜன் சிங் தான் காரணம்… நானோ தோனியோ கிடையாது – சர்ச்சையை கிளப்பிய கம்பீர்
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியை யாருமே மறைத்திருக்க மாட்டார்கள். அதுவும் தோனி தன்னுடைய பாணியில் சிக்ஸர் அடித்து கோப்பையை வென்ற தருணத்தை யாருமே மறக்க வாய்ப்பு கிடையாது. இதனாலேயே 2011 உலக கோப்பை என்றால் தோனி தான் நியாபகம் வருவார். ஆனால் அந்த போட்டியில் தோனியால் மட்டும
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியை யாருமே மறைத்திருக்க மாட்டார்கள். அதுவும் தோனி தன்னுடைய பாணியில் சிக்ஸர் அடித்து கோப்பையை வென்ற தருணத்தை யாருமே மறக்க வாய்ப்பு கிடையாது. இதனாலேயே 2011 உலக கோப்பை என்றால் தோனி தான் நியாபகம் வருவார். ஆனால் அந்த போட்டியில் தோனியால் மட்டுமே உலக கோப்பையை இந்தியா வென்றதா என்றால்? அது கிடையது என்பது சரியான பதில்.
ஏனென்றால் தோனி இந்தியாவை வழிநடித்தினாலும், அணியில் உள்ள வீரர்கள் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் சொல்லப்போனால் 2011 உலக கோப்பை தொடரில் ஆட்டநாயகன் இருந்து யுவராஜ் சிங்கிற்கு வழங்கப்பட்டது. அதே போல இறுதி போட்டியில் அற்புதமாக விளையாடிய கம்பீர் சதம் அடிக்கும் நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் பாதி ரன்களை அவரே அடித்து கொடுத்துவிட்டார். இருந்த போதிலும் தோனி அடித்த அந்த சிக்ஸர் தான் அனைவருக்கும் நியாபகம் இருக்கிறது.
இந்தநிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரரான கவுதம் கம்பீர் தற்போது உள்ள சோசியல் மீடியா நிலைமை குறித்து விமர்சித்தும், தோனி அடுத்த அந்த சிக்ஸர் குறித்தும் பேசியிருந்தார். அவர் கூறுகையில் “2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கிற்கு அப்போது இருந்த உடல்நலக் கவலைகளுடன் அவர் செய்ததை நாம் கொண்டாடுகிறோமா? ஜாகீர் கானின் அற்புதமா தொடக்க பந்துவீச்சை நாம் கொண்டாடுகிறோமா? உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நான்கு மெய்டன் ஓவர்களுடன் தொடங்குவது என்பது நம்பமுடியாத ஓன்று. ஆனால் அவருடைய திறமைக்கு நாம் போதுமான அளவு அவரை கொண்டாடவில்லை.
ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி சனிக்கிழமை பேட்டிங் செய்யும் போது, 2010ஆம் ஆண்டு நடந்த இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியை ஒளிபரப்பாளர் திரையில் ஒளிரச் செய்தார். ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்த கம்பீர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த போட்டியைப் பற்றி பேசிய கம்பீர், போட்டியில் வெற்றி பெற்றது ஹர்பஜன் சிங் தான் அல்ல என்று உறுதிபட கூறினார்.
கம்பீர் கூறுகையில் “அந்த போட்டியில் இந்தியாவுக்காக நான் வெற்றியை பெற்று தரவில்லை. அது ஹர்பஜன் தான். ஆம் நான் தோனியுடன் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் அமைத்து விளையாடினேன். ஆனால் வெற்றி ரன் அடிப்பவர் உண்மையில் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார் என்று நான் நம்புகிறேன். அதனால் ஹர்பஜன் சிங் தான் அந்த போட்டிக்கு வெற்றியை தேடி தந்தவர் என்று என்று கூறியுள்ளார் கம்பீர்.
Here’s the much talked about clip of Gautam Gambhir’s commentary last night.
— Vibhor (@dhotedhulwate) September 3, 2023
Gautam Gambhir was the POTM in the 2010 Asia Cup Final between India and Pakistan.
He says “Actually, it wasn’t me who won the match for the team. There was a partnership between me and Dhoni, but I… pic.twitter.com/NfwwmN4rMZ
கம்பீர் கூறுவது போல கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் இந்தியா 1 பந்து மீதம் இருக்கும் நிலையில் பெற்றது. மேலும் அந்த போட்டியில் கம்பீர் 83 ரன்களும், தோனி 56 ரன்களும் விளாசினார். ஆனால் அவர்கள் ஆட்டமிழந்த நிலையில் ஹர்பஜன் சிங் 6 அடித்து போட்டியை முடிந்து வைத்தார். இந்நிலையில் எப்போதுமே எதாவது ஒன்றை சொல்லி சர்ச்சையில் சிக்கும் கம்பீர் இந்த விஷியத்திலும் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்திற்கு உள்ளக்கியுள்ளார்.