பாபர் அசாமில் கேப்டன்சி மிகவும் சுமாராக இருந்தது – ஓபனாக விமர்சித்த கம்பீர்.

இந்திய அணியானது ஏற்கனவே ஆசிய கோப்பை 2023 தொடரில் இறுதி போட்டிக்கு சென்ற நிலையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியானது மிகவும் முக்கியமானது ஏனென்றால் இதில் வெற்றி பெருவபர் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோதுவார்கள். இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ

By ·

இந்திய அணியானது ஏற்கனவே ஆசிய கோப்பை 2023 தொடரில் இறுதி போட்டிக்கு சென்ற நிலையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியானது மிகவும் முக்கியமானது ஏனென்றால் இதில் வெற்றி பெருவபர் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோதுவார்கள். இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 42 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை குவித்தது.

இதனையடுத்து 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 42 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்து ஆசிய கோப்பை பைனலுக்கு சென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் வெற்றிக்கான வாய்ப்பு இருந்தும் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரிலிருந்தே வெளியேறியது.

இது பலருக்கும் அதிர்ச்சியான ஒன்றாக இருந்தது. மேலும் பாகிஸ்தான் அணியானது இடஙக போட்டியில் பல பெரிய தவறுகளையும் செய்தது. அது இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தது.இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் குறித்து விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில் “என்னைப் பொறுத்தவரை பாபர் அசாமில் கேப்டன்சி மிகச் சாதாரண இருந்தது. ஜமான் கானின் ஓவர் மிட்-ஆஃப் ஓவரில் ஒரு பவுண்டரி அடிக்கப்பட்டது, ஷாஹீன் ஷா அப்ரிடியின் ஓவர் மிட்-ஆஃப் ஓவரில் மற்றொரு பவுண்டரி அடிக்கப்ட்டது, அந்த இரண்டு பந்துகளும் மெதுவாகத்தான் இருந்தன.

நீங்கள் மெதுவாக பந்துவீச விரும்பினால், மிட்-ஆஃப் பீல்டரை லாங்-ஆஃபில் வைத்து, தேர்டு மேனை மேலே கொண்டு வாருங்கள். இது மிகவும் எளிமையான கேப்டன்சி இது. கடைசி ஓவரில் 13 ரன்கள் மீதம் இருந்திருந்தால், அது கடினமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அது இலங்கை அணிக்கு கடினமான ஒன்றாக இருந்திருக்கும்.

நீங்கள் ஒரு கட்டத்தில் இலங்கை அணியின் ஆட்டத்தை முன்னோக்கி நகர்த்த அனுமதித்தீர்கள். உங்களின் ஆறாவது பந்துவீச்சாளருக்கான ஒதுக்கீட்டை முடிக்க விரும்பினீர்கள். அந்த நேரத்தில் குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம இடையே கூட்டணி உருவாகும்போது, ​​உங்கள் முக்கிய பந்துவீச்சாளர்களை நீங்கள் கொண்டு வந்து விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்திருக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார் கம்பீர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை