கடைசி சிக்ஸர் பற்றியே பேசுறாங்க… யுவராஜ் சிங் இருந்த உடல்நிலைக்கு 2011 உ.கோ எவ்வளவு பண்ணாரு – கம்பீர் அதாங்க பேச்சு.

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியை யாருமே மறைத்திருக்க மாட்டார்கள். அதுவும் தோனி தன்னுடைய பாணியில் சிக்ஸர் அடித்து கோப்பையை வென்ற தருணத்தை யாருமே மறக்க வாய்ப்பு கிடையாது. இதனாலேயே 2011 உலக கோப்பை என்றால் தோனி தான் நியாபகம் வருவார். ஆனால் அந்த போட்டியில் தோனியால் மட்டும

By ·

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியை யாருமே மறைத்திருக்க மாட்டார்கள். அதுவும் தோனி தன்னுடைய பாணியில் சிக்ஸர் அடித்து கோப்பையை வென்ற தருணத்தை யாருமே மறக்க வாய்ப்பு கிடையாது. இதனாலேயே 2011 உலக கோப்பை என்றால் தோனி தான் நியாபகம் வருவார். ஆனால் அந்த போட்டியில் தோனியால் மட்டுமே உலக கோப்பையை இந்தியா வென்றதா என்றால்? அது கிடையது என்பது சரியான பதில்.

ஏனென்றால் தோனி இந்தியாவை வழிநடித்தினாலும், அணியில் உள்ள வீரர்கள் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் சொல்லப்போனால் 2011 உலக கோப்பை தொடரில் ஆட்டநாயகன் இருந்து யுவராஜ் சிங்கிற்கு வழங்கப்பட்டது. அதே போல இறுதி போட்டியில் அற்புதமாக விளையாடிய கம்பீர் சதம் அடிக்கும் நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் பாதி ரன்களை அவரே அடித்து கொடுத்துவிட்டார். இருந்த போதிலும் தோனி அடித்த அந்த சிக்ஸர் தான் அனைவருக்கும் நியாபகம் இருக்கிறது.

இந்தநிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரரான கவுதம் கம்பீர் தற்போது உள்ள சோசியல் மீடியா நிலைமை குறித்து விமர்சித்தும், தோனி அடுத்த அந்த சிக்ஸர் குறித்தும் பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் “2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கிற்கு அப்போது இருந்த உடல்நலக் கவலைகளுடன் அவர் செய்ததை நாம் கொண்டாடுகிறோமா? ஜாகீர் கானின் அற்புதமா தொடக்க பந்துவீச்சை நாம் கொண்டாடுகிறோமா? உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நான்கு மெய்டன் ஓவர்களுடன் தொடங்குவது என்பது நம்பமுடியாத ஓன்று. ஆனால் அவருடைய திறமைக்கு நாம் போதுமான அளவு அவரை கொண்டாடவில்லை.

சச்சின் டெண்டுல்கரின் முயற்சியை நாம் கொண்டாடுகிறோமா? என்றால் ஆம் அவரையும் வெற்றியையும் கொண்டாடுகிறோம். ஆனால் உலகக் கோப்பையில் அவர் இரண்டு சதங்கள் அடித்தவர் என்று எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? மொஹாலியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை நாம் கொண்டாடுகிறோமா? சுரேஷ் ரெய்னா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்திலும் பாகிஸ்தானுக்கு மொஹாலியிலும் அற்புதமாக விளையாடியது கொண்டாடினோம் என்றார் கம்பீர்.

மேலும் கூறுகையில், “இறுதிப் போட்டியில் எம்எஸ் தோனியின் இன்னிங்ஸை நாம் கொண்டாடும் அதே வேளையில், இந்த மற்ற முயற்சிகளையும் நாம் கொண்டாட வேண்டும். ஒரு இன்னிங்ஸால் இந்தியா கோப்பையை வெல்ல முடியாது. இது ஒரு கூட்டு முயற்சி, எனவே அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் சமூக வலைதளங்கள் காரணமாக நாம் அதை செய்யவில்லை. அது நம் அனைவருக்கும் தெரியும்.

சமூக வலைதளங்களில் அணியை விட தனி நபர்களைக் கொண்டாடும் போக்கு எப்போதும் உள்ளது. அப்படிச் செய்யும்போது, ​​இந்தியா வெற்றிபெற முக்கியப் பங்கை கொடுத்த வீரர்களை நாம் கொண்டாடுவதில்லை. இது ஒரு பிரச்சினை நான் சொல்வதெல்லாம் நாம் ஒட்டுமொத்த அணியையும் கொண்டாட வேண்டும் என்பதுதான். தோனியை நாம் கொண்டாடும் அதே வேளையில், இந்திய வெற்றியில் முக்கியப் பங்காற்றிய மற்றவர்களையும் கொண்டாட வேண்டும் என்றார் கவுதம் கம்பீர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை