ரோஹித் சர்மா இப்ப இப்படி இருக்காருன்னா அதுக்கு காரணம் தோனிதான் – கம்பீர் ஓபன் டாக்.

ஆசிய கோப்பை தொடரில் சமீபத்தில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய சூப்பர் 4 போட்டியில் இந்தியா மெகா வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. ஏனென்றால் உலகின் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுத

By ·

ஆசிய கோப்பை தொடரில் சமீபத்தில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய சூப்பர் 4 போட்டியில் இந்தியா மெகா வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. ஏனென்றால் உலகின் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டு அசதியுள்ளது இந்தியா. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இலங்கை அணியை எதிர்கொண்டது இந்தியா.

இந்த போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது மோசமாக விளையாடியது என்றே சொல்லலாம். இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர். இதனால் இந்திய அணியானது 49.1 ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ரன்களை குவித்தது.

இதனையடுத்து இந்த சுலபமான ஸ்கொரை எதிர்த்து களமிறங்கிய இலங்கை அணியால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரரான கம்பீர்.

இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 53 ரன்களை எடுத்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த ரோகித் சர்மா புதிய வரலாறு படைத்தார். இந்நிலையில் தான் இந்நிலையில் எம்எஸ் தோனி மட்டும் ஆரம்ப காலங்களில் தொடர் வாய்ப்புகளை கொடுக்காமல் போயிருந்தால் ரோகித் சர்மா இன்று இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் கம்பீர் கூறுகையில் ” ஓருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அடிப்பது என்பது அவருக்கு எளிதான காரியமாக இருந்திருக்காது. ஏனென்றால் அவர் பல மேடு பள்ளங்களை சந்தித்துள்ளார். அதைப் பார்த்த காரணத்தாலேயே இளம் வீரர்களுக்கு கடினமான நேரங்களில் ரோகித் சர்மா கேப்டனாக ஆதரவு கொடுத்து இருக்கிறார் தோனி. மேலும் ரோகித் சர்மா இன்று ரோகித் சர்மாவாக இருக்கிறார் என்றால் அதற்கு எம்எஸ் தோனி முக்கியமான காரணம்.

எனவே அதே மரபை உருவாக்க வேண்டுமெனில் ரன்கள் அடிப்பதை விட நிறைய இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மாவும் ஆதரவு கொடுக்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாட இருக்கும் இளம் வீரர்கர்களை ரோஹித் சர்மா எப்படி ஆதரவு கொடுத்து வளர்க்கப் போகிறார் என்பதை பார்ப்பதில் ஆவல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கம்பீர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை