நம்மளுடைய விருந்தினர்களிடம் இது போல் நடந்து கொள்ளலாமா?பாக்.வீரர்களுக்காக களம் இறங்கிய கம்பீர்.

அகமதாபாத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கவுதம் கம்பீர் சிலவற்றை கூறியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணி

By ·

அகமதாபாத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கவுதம் கம்பீர் சிலவற்றை கூறியுள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

உலகக்கோப்பை ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியை அகமதாபாத்தில் நடத்த வேண்டாம் வேறு ,மைதானத்தை மாற்றி அமைக்குமாறு கேட்டு கொண்ட நிலையில் ICC மற்றும் பிசிசிஐ அதை பற்றி ஏதும் அவர்கள் அதே மைதானத்தில் விளையாடும்படியும் கூறி இருந்தது. ஆனால் நேற்று நடத்த கோஷங்கள் தான் தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். இந்த செயலுக்கு கம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கம்பீர் கூறியது:

நீங்கள் தாரளமாக உங்களுக்கு பிடித்த அணியை ஆதரிக்கலாம் ஆனால் மற்ற நாடுகளில் இருந்து வந்த அணிகளிடம் இது போன்று தவறாக நடந்து கொள்ள கூடாது. அவர்கள் எதிரிகள் கிடையாது அவர்கள் நம்முடைய விருந்தினர்கள். அவர்கள் உலகக்கோப்பை போட்டியை விளையாட விசிட்டர்களாக இங்கு வந்து இருக்கிறார்கள்.என்றும் கம்பீர் கூறி இருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை