“என் அணியின் வீரர்களை சீண்டினால் நான் அவ்வாறு தான் நடந்து கொள்வேன்” – கோலியிடம் ஏற்பட்ட மோதல் குறித்து பேசிய கம்பீர்.

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வியைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை சிலர் கேலி செய்து வந்தனர். அவர்களுக்கு இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் கடுமையாக சாடினார்.2023 உலகக் கோப்பையில் இந்தியாவின் 10 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியை தழுவா

By ·

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வியைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை சிலர் கேலி செய்து வந்தனர். அவர்களுக்கு இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் கடுமையாக சாடினார்.2023 உலகக் கோப்பையில் இந்தியாவின் 10 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியை தழுவாமல் ஆஸ்திரேலியா அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தோற்கடித்தது. இந்த இறுதிப்போட்டியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளும், அவரது ஆதரவாளர்களும் பிரதமர் மோடியை அதிர்ஷம் இல்லாதவர் என்றும் கூறிவந்தனர். இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மன உறுதியை உயர்த்துவதற்காக இந்திய டிரஸ்ஸிங் அறைக்குச் சென்று, போட்டியின் முயற்சிக்கு பாராட்டு வார்த்தைகளை வீரர்களுக்கு கூறி இருந்தார்.

அந்த கடினமான நேரத்தில் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சில பல வார்த்தைகளை வழங்கியதற்காக பிரதமர் மோடி பலரால் பாராட்டப்பட்டாலும், ஒரு பகுதி ஊடகங்களும் ரசிகர்களும் அந்த நடவடிக்கையைப் பாராட்டவில்லை மற்றும் அதற்க்கு மாறாக அவரின் செயலை விமர்சித்து வந்தனர். கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினருமான கவுதம் கம்பீர், பிரதமர் மோடியை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று அழைத்தவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

2011 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் அணியில் இருந்த கம்பீர், மொஹாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிக்கு முன்னதாக, அப்போதைய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கும் இந்திய அணியைச் சந்தித்ததைச் சுட்டிக்காட்டினார். அதிர்ஷம் இல்லாதவர் என்ற வார்த்தை, யாருக்கும் எதிராக, குறிப்பாக இந்த நாட்டின் பிரதமருக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடிய மிக மோசமான வார்த்தையாக இருக்கலாம்.

2011 கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியில், டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். அந்த போட்டியில் நாங்கள் தோற்று, அவர் எங்களை சந்திக்க வந்திருந்தால், அதில் என்ன தவறு இருந்திருக்கும்? ”என்று கவுதம் கம்பீர் கூறினார். மேலும் அவர் ஐபிஎல் 2023-ல் லக்னோவில் நடந்த LSG vs RCB ஆட்டத்தின் போது, ​​நவீன்-உல்-ஹக்குடன் கோஹ்லியின் வாக்குவாதத்திற்குப் பிறகு, விராட் கோலியுடன் ஏற்பட்ட சண்டை குறித்து கம்பீர் பேசினார்.

LSG ஆலோசகராக இருந்த கெளதம் கம்பீர், எவருக்கும் எதிராக தனது அணியின் வீரருக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறினார்.”ஒரு வழிகாட்டியாக, யாரும் வந்து எனது வீரர்களின் மீது நடந்துக்க நடக்க முடியாது, எனக்கு மிகவும் வித்தியாசமான நம்பிக்கை உள்ளது. ஆட்டம் முடியும் வரை, தலையிட எனக்கு உரிமை இல்லை, ஆனால் ஆட்டம் முடிந்ததும், யாரேனும் எனது வீரர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அவர்களைப் பாதுகாக்க எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன, ”என்று காம்பி கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை