ரோஹித் 5 கோப்பையை வென்றிருக்கிறார்.. ஆனால் சிலரால் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை – மறைமுகமாக விமர்சித்த கம்பீர்.
முதன் முறையாக ஒருநாள் உலக கோப்பை தொடரானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறும் காரணத்தினால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 போலவே இந்த ஆண்டும் இந்திய அணியானது இந்திய மண்ணில் உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு இருக்கிறது
முதன் முறையாக ஒருநாள் உலக கோப்பை தொடரானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறும் காரணத்தினால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 போலவே இந்த ஆண்டும் இந்திய அணியானது இந்திய மண்ணில் உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரம் அதற்கு முன்னாக இந்தியா ஆசிய கோப்பை 2023 தொடரில் அற்புதமாக செயல்பாடு கோப்பையை வென்று அந்த எதிர்பார்ப்பை மேலும் ஆதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய பல வீரர்கள் உலக கோப்பை தொடரிலும் இருக்கின்றனர், மேலும் தேவைப்படும் போது சில மாற்றங்கள் ஏற்படும். அதே நேரம் அப்படி எந்த மாற்றங்களை ஏற்படுத்தினாலும் அதன் தாக்கம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் மீது இருக்கும். குறிப்பாக அணி சரியாக செயல்படவில்லை என்றால் பல கேள்விகள் கேப்டன்மீது வைக்கப்படும்.
அப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் இந்திய அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோஹித் சாமர் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “ரோஹித் கேப்டன் மீது எந்த சந்தேகமும் இருந்ததில்லை. அவர் ஒரு கேப்டனாக 5 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். ஆனால் பலர் இதை ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை என்று விராட் கோலியை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.
சொல்லப்போனால் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படித்திருந்தாலும் இந்தியாவில் விளையாடப்படும் ஐபிஎல் தொடரில் இவர் வழிநடத்தும் ஆர்சிபி அணியால் வெற்றிபெற முடியவில்லை.மேலும் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட விராட் கோலி வெல்லாத நிலையில் ஆர்சிபி ரசிகர்களுக்கு அது ஒரு கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கம்பீர் இப்படி விராட் கோலியை மறைமுகமாக விமர்சித்துள்ளது பலருக்கும் கோப்பைதை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த பேட்டியில் மேலும் பேசிய கம்பீர் கூறுகையில் “ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு உண்மையான சோதனை இன்னும் 15 நாட்களில் வரும். உங்களின் சிறந்த 15-18 வீரர்கள் இப்போது டிரஸ்ஸிங் ரூமில் உள்ளனர். அவர்களால் சிறப்பான ஆட்டத்தை வழங்காமல் போனால் உங்கள் மீது கேள்விகள் வரும். ஒவ்வொரு உலகக் கோப்பைக்குப் பிறகும், கேப்டனால் டெலிவரி செய்ய முடியாவிட்டால் கேள்விகள் எழுப்பப்படும். அதை விராட் கோலி எதிர்கொண்டார்.
2007ல் ராகுல் டிராவிட் அதை எதிர்கொண்டார். 2023ல் இந்தியா பந்துவீசத் தவறினால், ரோஹித்தின் கேப்டன்ஷிப்பில் கேள்விகள் எழும். ஆனால் இந்த அணிக்கு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வரும் திறன் உள்ளது என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியானது ஆகிய கோபப்பை தொடரை முடித்த நிலையில் வரும் 22ஆம் தேதியில் இருந்து 27 தேதி வரையில் மூன்று ஒருநாள் போட்டிங்களில் விளையாட இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.