2022 ஆஸ்திரேலியாவில் பண்ணது போல இப்பவும் பண்ணிடாதீங்க.. இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை.
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டும
இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணி கோப்பையை தகுவதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துவே போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மூத்த வீரர்கள் இன்னமும் அணியில் இருந்து வருகின்றனர். மேலும் ஹர்திக் பாண்டியதான் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவை வழிநடத்துவார் என்றிருந்த நிலையில் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவே கேப்டனாக இருக்கிறார்.
மேலும் இந்த உலக கோப்பை போட்டியில் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த உலக கோப்பைகளை போல இல்லாமல் இந்த முறை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் கடந்த 2022 உலக கோப்பை முழுவதும் அற்புதமாக விளையாடிய இந்தியா அரையிறுதி சுற்றில் சொதப்பியது. எனவே அதே போன்று சொதப்ப வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார் கங்குலி.
அவர் கூறியதாவது :பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் சாதனை நீண்ட காலமாக மிகவும் சிறப்பாக உள்ளது. டி20 வடிவத்தை 50 ஓவர்களுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் மிகவும் ஆபத்தானது. அவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது நாங்கள் அவர்களை அகமதாபாத்தில் தோற்கடித்தோம். அவர்கள் எதிர்த்து நாம் சுதந்திரமாக விளையாடினோம். நான் எப்போதும் ‘சுதந்திரமாக’ என்ற வார்த்தையைச் சொல்ல காரணம் இந்தியா ஆஸ்திரேலியாவில் கடந்த உலகக் கோப்பையில் சுதந்திரமாக விளையாடியதாக நான் நினைக்கவில்லை.
நான் இந்திய அணிக்கு சொல்வது என்னவென்றால் வெற்றி தோல்வி பற்றி கவலைப்பட வேண்டாம். உலகக் கோப்பையை வெல்வது பற்றி நினைக்க வேண்டாம். ஒவ்வொரு விளையாட்டையும் போய் விளையாடு. இந்தியாவுக்கு உலகக் கோப்பையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. டி20 அணியைப் போல் இந்தியா விளையாட வேண்டும். நம்மிடம் அபாரமான திறமைகள் உள்ளன. பயப்படாமல் விளையாடுங்கள், அடித்துக் கொண்டே இருங்கள்.
அதனால்தான் நான் சொல்கிறேன், ஒவ்வொருவரும் இந்தியாவை வெல்ல முடியும். எனவே வெற்றி பெற ஒரே வழி சுதந்திரத்துடன் விளையாடுவதுதான். இந்தியா அந்த கூடுதல் பேட்ஸ்மேனுடன் விளையாட வேண்டம். மேலும் முதல் பந்தில் இருந்து அடிக்க வேண்டும், நீங்கள் ஒவ்வொரு பந்தையும் கடைசி பந்தைப் போல விளையாட வேண்டும் என்றார் கங்குலி.