இது வெறும் ஆரம்பம்தான்.. உலக கோப்பை பிளேயின் 11ல் ரிங்கு சிங் இடம்பெறாதது குறித்து கங்குலி கருத்து.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இந்த தொடருக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் டி20 மாயாஜாலமானது உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பலருக்கு இந
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இந்த தொடருக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் டி20 மாயாஜாலமானது உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பலருக்கு இந்த தேர்வு உலக கோப்பையை வெல்ல சரியாக இருக்கும் என்றும், சிலருக்கு இந்த தேர்வு சரியாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் அதிரடி காட்டி போட்டியை வென்று கொடுத்த ரிங்கு சிங் இந்த உலக கோப்பை தொடரில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் அவருக்கு இருப்பு வீரர்கள் பட்டியலில் மட்டுமே இடம் கிடைத்தது. இது கொஞ்சம் துரதிருஷ்டவசமானது தான். இந்நிலையில் தான் ரிங்கு சிங் உலக கோப்பையில் விளையாடும் பிளேயின் 11ல் இடம் பெறாதது குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரரும் கேப்டனுமான கங்குலி.
அவர் கூறுகையில் : போட்டி நடக்கும் இடம் வெஸ்ட் இண்டீஸ் என்பதினால் அங்கு விக்கெட் கொஞ்சம் மெதுவாகவும் ஸ்பின்னர்களுக்கு உதவும் விக்கெட்டுகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் தான் உலக கோப்பை அணியின் தேர்வாளர்கள் இன்னொரு ஸ்பின்னருடன் செல்லலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். அதனால் தான் ஒருவேளை ரிங்கு சிங்கிற்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். ஆனால் இது விடும் ஆரம்பம் தான் என்றார் கங்குலி.
இந்நிலையில் இதற்கு முன்னாள் பேசிய தேர்வாளர் அகர்கர் கூறுகையில் : இது கொஞ்சம் துரதிருஷ்டவசமானது. ரிங்கு எந்த தவறும் செய்யவில்லை. அணியின் 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருப்பது சரியாக இருக்கும் என்று நினைத்தோம். மேலும் பந்துவீச்சில் ஒருவரை இணைப்பது வசதியாக இருக்கும். ரிங்கு எங்களுடன் வருகிறார். அதிலிருந்தே தெரியும் அவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்று. அது அவருக்கு கொஞ்சம் கடினம் தான். இருந்த போதிலும் அணியில் 15 வீரர்களை மட்டுமே தெரிந்தெடுக்க முடியும் என்றார் அகர்கர்.
டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :
ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்