“இவங்க பழைய பாகிஸ்தான் அணி மாறி இல்லை, இப்படியே இருந்த ஊருக்கு பொட்டியே கட்ட வேண்டியது தான்” – கங்குலி காட்டம்.

இது முன்பு இருந்த பாகிஸ்தான் அணி போல் தற்போது உள்ள அணி இல்லை என்று கங்குலி பாகிஸ்தான் அணியை கடுமையாக தாக்கினார். உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடு

By ·

இது முன்பு இருந்த பாகிஸ்தான் அணி போல் தற்போது உள்ள அணி இல்லை என்று கங்குலி பாகிஸ்தான் அணியை கடுமையாக தாக்கினார். உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் சில தினங்களுக்குமுன் நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். இந்த செயலுக்கு கம்பீர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கங்குலி கூறியது:

இது குறித்து கங்குலி கூறுகையில் இந்திய பாகிஸ்தான் போட்டியானது ஒரு தலைப்பட்சமாக முடிந்து விட்டது. எங்கள் காலத்தில் எல்லாம் பாகிஸ்தான் அணி வேறு மாதிரியாக இருக்கும் தற்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு போல் கிடையாது. பேட்டிங்கில் ஒரு அழுத்தத்தை கூட அணியால் சமாளிக்க முடியவில்லை.

இனி இந்த அணியளவில் இந்த உலகக் கோப்பையில் தொடர்வது மிகவும் கடினமானது ஒன்று. ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடினார். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மிக சிறப்பாக செயல்படுகிறது. பேட்டிங் பந்து வீச்சு என்று எல்லா துறைகளிலும் இந்திய அணி சார்பாக செயல்பட்டு வருகிறது என்றும் முன்னாள் இந்திய அணியின் வீரர் கங்குலி கூறியிருந்தார்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை