தோனி இந்தியாவிற்கு கிடைத்த ஆசிர்வாதம் – ஆச்சரியமாக பேசிய கம்பீர்
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போ
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போட்டியில் பல வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை பெற்று கொடுத்ததை இன்னமும் யாராலும் மறக்க முடியாது.
அதே போன்று கடந்த 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கோப்பையை வென்றதன் மூலம் 3 வகையான உலக கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது. மேலும் இதில் முக்கியமான ஓன்று என்னவென்றால் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுத்தது தான். குறிப்பாக தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மாவிற்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டார்.
கடந்த 2011 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவை தோனி கழற்றி விட்டாலும் அதற்கு பிறகு ரோஹித்தின் திறமையை புரிந்து கொண்ட தோனி அவரை கொண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றி பெற்றார். இந்நிலையில் தற்போது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் தோனியுடன் விளையாடிய கம்பீர் தோனி குறித்து பேசியுள்ளார்.
பொதுவாகவே தோனிக்கு கம்பீருக்கும் இடையே அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளாவிட்டாலும் ரசிகர்களுக்கு இடையே மோதல் இருக்கும், அதிலும் தோனி 2011 உலக கோப்பையில் அடித்த சிக்ஸர் தான் இந்தியாவை வெற்றியடைய வைத்தது என்ற கருத்தை முற்றிலுமாக கம்பீர் எதிர்த்த நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தோனி குறித்து புகழ்ந்து பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கம்பீர் பேசுகையில் ” தோனி கேப்டன்சியின் காரணமாக, ஒரு பேட்டராக அவர் சாதித்ததை அவரால் சாதிக்க முடியவில்லை. கேப்டனாக பல முறை அணியை முதலில் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை எம்.எஸ் தோனி கேப்டனாக இல்லாவிட்டால், அவர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்திருக்க முடியும். அவர் தற்போது உள்ள பல ODI சாதனைகளை முறியடித்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
தோனி நிறைய கோப்பைகளை வென்றுள்ளார், ஆனால் தனித்தனியாக அவர் கோப்பைகளுக்காக சர்வதேச ரன்களை தியாகம் செய்தார். இப்போது உள்ளவர்கள் முதலில் கீப்பர்களாகவும், பின்னர் பேட் செய்தவர்களாகவும் இருந்தனர், ஆனால் எம்எஸ் முதலில் பேட் செய்தார், பின்னர் விக்கெட் கீப்பராக இருந்தார்.
இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஆசீர்வாதம் எம்எஸ் தோனி. ஏனென்றால் 7வது இடத்தில் இருந்து நமது அணிக்கு வெற்றியை தேடித்தரும் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்டராக தோனி எங்களுக்கு கிடைத்தார். ஏனென்றால் அவரிடம் அந்த ஆற்றல் இருந்தது என்று கூறியுள்ளார் கம்பீர்