விராட் கோலியும் நானும் எப்படிப்பட்டவர்கள் என்று உங்களுக்கு தெரியாது – ஓபனாக பேசிய கம்பீர்.
ஐபிஎல் 2024 சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக மோதியது. இந்த போட்டியில் அணிகளுக்கு இடையே இருக்கும் போட்டி என்றாலும் விராட் கோலிக்கும் கம்பீருக்கும் இடையே சில சம்பவங்கள் ஏற்படும் என்று ஆவலாக இருந்தனர். இது கால காலமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கூட இவர்களுக்கு இடையே பெரும் சண்டை
ஐபிஎல் 2024 சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக மோதியது. இந்த போட்டியில் அணிகளுக்கு இடையே இருக்கும் போட்டி என்றாலும் விராட் கோலிக்கும் கம்பீருக்கும் இடையே சில சம்பவங்கள் ஏற்படும் என்று ஆவலாக இருந்தனர். இது கால காலமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கூட இவர்களுக்கு இடையே பெரும் சண்டையானது நடந்தது. அந்த சம்பவம் தான் அந்த ஆண்டின் சூடான செய்தியாக இருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியிலும் அப்படி ஏதாவது நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கம்பீரை கட்டியணைத்து பிரச்னையை முடித்து கொண்டார் விராட் கோலி. இதனால் சம்பவத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும் இந்த சம்பவத்தை மீல்ஸ் கிரிக்கெட்டர்கள் பலர் கலாய்த்து வந்தனர். மேழும் இதற்கு விராட் கோலியும் ரசிகர்கள் நான் செய்த விஷயத்தினால் கொஞ்சம் ஏமாந்து விட்டனர். நான் நவீன் உலா ஹக் மற்றும் கம்பீர் பாய்யையும் கட்டிப்பிடித்தேன். எனவே அவர்களுக்கு மாசாலா இல்லாமல் போனது என்றார்.
இந்நிலையில் கவுதம் கன்பீர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுகையில் : இவை எல்லாம் டிஆர்பிக்காக ஊடகத்திற்கு நான் எப்படிப்பட நபர், விராட் கோலி எப்படிப்பட்ட அவர் என்று அவர்களுக்கு தெரியாது. எல்லா ஊடகங்களுக்கு இதை வாய்த்து ஒரு ஹைப்பை உருவாக்க விரும்புகின்றனர். ஆனால் அதனை பாசிட்டிவ் வழியிலும் செய்யலாம்.
எங்கள் இருவருக்கும் பொறுப்பு வந்துவிட்டது. எங்களுடைய பிரச்சனைக்கும், இருவருடைய வாழ்க்கையிலும் நடுவே மற்றவர்கள் வர எந்த அதிகாரமும் அவர்களுக்கு கிடையாது என்றார் கவுதம் கம்பீர்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் : கிரிக்கெட்டில் எல்லா வீரர்களும் தத்துவமான கிரிக்கெட்டை விளையாடுவார்கள். மேக்ஸ்வெல் விளையாடுவது போல விராட் கோலியினால் விளையாட முடியாது. அதே போல் விராட் கோலி விளையாடுவது போல மெக்ஸ்வெல் விளையாட முடியாது. உங்களுக்கு அணிக்கு பலவிதமான பேட்டார்கள் தேவை. அப்போதுதான் அணி சமமான நிலையில் இருக்கும்.
நீங்கள் ஒரு போட்டியில் வென்று 100 ஸ்ட்ரைக் ரெட் இருந்தாலும் கூட அது நல்லதுதான். ஆனால் அதே வேலையில் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் தோல்வியை தழுவினால் அதனை பற்றி யாருமே பேசமாட்டார்கள். அதுதான் நிதர்சனம் என்றார் கம்பீர். இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ஆர்சிபி 16 ஓவர்களில் 200 ரன்களை சுலபமாக கடந்து வெற்றி பெற்றது.