பாபர் தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பி செல்ல வேண்டுமா? கம்பீர் அதிரடி கருத்து.

உலக கோப்பை 2023 தொடரானது தற்போது இறுதி கடத்தை எட்டியுள்ள. இந்த உலக கோப்பையில் விளையாடிய அனைத்து நாடுகளை சேர்ந்த அணிகளுமே தங்களினால் முடிந்த அனைத்தையும் செய்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று போராடி வருகின்றனர். இருந்த போதிலும் தற்போது போட்டியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள ந

By ·

உலக கோப்பை 2023 தொடரானது தற்போது இறுதி கடத்தை எட்டியுள்ள. இந்த உலக கோப்பையில் விளையாடிய அனைத்து நாடுகளை சேர்ந்த அணிகளுமே தங்களினால் முடிந்த அனைத்தையும் செய்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று போராடி வருகின்றனர். இருந்த போதிலும் தற்போது போட்டியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்த அணி அரையிறுதி போட்டிக்கு செல்லவும் என்பது தெரிந்து விட்டது.

இருந்த போதிலும் பாகிஸ்தான் அணிக்கு இன்னமும் கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பாகிஸ்தான் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறது, அதே போல நியூசிலாந்து அணி 4வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு அனைத்து போட்டிகளும் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தான் நாளை இங்கிலாந்து அணியுடன் மோத இருக்கிறது. ஆனாலும் ஒரு சிக்கல் பாகிஸ்தான் அணிக்கு இருக்கிறது.

அதாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வரவேண்டுமாயின் போட்டியை வென்றால் மட்டும் போதாது, பாகிஸ்தான் 300 ரன்களை விளாசி இங்கிலாந்து அணி 13 ரன்களில் வீழ்த்த வேண்டும். அதே சமயம் பாகிஸ்தான் 450 ரன்களை எடுத்தது என்றால் இங்கிலாந்து அணியை 160 ரன்களில் சுருட்ட வேண்டும். ஒருவேளை டாஸை வென்று இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தால் பாகிஸ்தான் வெளியேறிவிடும்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான் பாபர் அசாம் நிலை குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கம்பீர். அவர் கூறுகையில் “நிச்சயமாக பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது சவாலானது. ஆனால் ஒரு தலைவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் என்ன சொல்ல வேண்டும்? அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு தாங்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள் என்று அவர் சொல்ல வேண்டுமா?

அவர் தனது நாட்டின் கிரிக்கெட் அணியின் தலைவர் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்த அவருக்கு முழு உரிமையும் உண்டு. வெற்றிபெற 1% வாய்ப்பு இருந்தாலும் குறைந்தபட்சம் நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் இன்னும் அவுட் ஆகவில்லை. கிரிக்கெட்டில் எது வேடுமானாலும் நடக்கலாம். அதனால் நான் நம்புகிறேன்.

சமூக வலைதளங்களில் நாம் என்ன சொன்னாலும், எழுதினாலும் பரவாயில்லை, ஒரு தலைவரின் கடமை தங்களால் முடியும் வரை போட்டி முடிந்துவிடாது என்று நம்புவதுதான். அவர்களுக்கு இழப்பதற்கு எதுவும் கிடையாது. நீங்கள் போய் விளையாடுங்கள் 400 ரன்களை எடுக்க முயற்சிக்கும் போது 200 அல்லது 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், குறைந்த பட்சம் 450 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்து அவர்களை 200 ரன்களில் சுருட்ட வேண்டும் என்று அவர்கள் மனதில் இருக்கும் என்று கூறியுள்ளார் கம்பீர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை