அவர ட்ரோல் பண்ணாதீங்க.. மரியாதைக்காகவும், வெற்றிக்காகவும் போராடுவது உரிமை – கம்பீர் கருத்து.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடரை வென்றாலும் அந்த தொடரில் பால் மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலி, கவுதம் கம்பீர், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் தொடர்பான பிரச்னை தான். அதாவது நடந்த முட

By ·

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடரை வென்றாலும் அந்த தொடரில் பால் மறக்க முடியாத சம்பவங்கள் நடந்தது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலி, கவுதம் கம்பீர், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் தொடர்பான பிரச்னை தான். அதாவது நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி vs லக்னோ ஜென்ட்ஸ் போட்டியின் போது விராட் மற்றும் நவீன் உல் ஹக் இருப்பவருக்கும் மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் போட்டி முடிந்தும் தொடர்ந்த நிலையில் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீருக்கும் விராட் கோலிக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இது முடிந்த போதிலும் சோசியல் மீடியாவில் விராட் கோலிக்கும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கிற்கும் இடையே சில சர்ச்சையான கருத்துக்கள் ரசிகர்களால் பரப்பபட்டது. மேலும் நவீன் உல் ஹக் விளையாடும் போதிலும் இந்திய ரசிகர்கள் “கோலி கோலி” என முழக்கமீட்டனர்.

இது தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டியிலும் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா vs ஆப்கானிஸ்தான் போட்டியின் போது நாவின் உல் ஹக் பேட்டிங் வந்தார் அப்போதும் இதே போன்று நடந்தது. ஆனால் போட்டி முடிந்த பிறகு விராட் கோலியும் நவீன் உல் ஹக் இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி கொண்டனர். இதிலிருந்து இருபவரும் சமாதம் ஆகிவிட்டனர் என்பது தெளிவாக தெரிவந்தது.

சுமுகமாக முடிந்த பிரச்னை :

மேலும் போட்டி முடிந்ததும் நவீன் உல் ஹக்கை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும் நவீன் உல் ஹக்கும் “ஆடுகளத்தில் என்ன நடக்கிறது என்பதும் மைதானத்திற்குள் என்ன நடக்கிறது என்பதும், வெளியே நடக்காது. கைகுலுக்கிய பிறகு, விராட் அதை முடிக்கட்டும் என்று கூறினார், நானும் அதை முடிக்கட்டும் என்று சொன்னேன் என்று கூறியிருந்தார்.

கம்பீர் கூறியது :

இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் இது குறித்து பேசியுள்ளார் அவர் கூறுகையில் “நீங்கள் களத்தில் போராடுங்கள், களத்திற்கு வெளியே அல்ல. ஒவ்வொரு வீரருக்கும் தனது அணிக்காக போராடவும், மரியாதைக்காக போராடவும், வெற்றி பெற போராடவும் உரிமை உண்டு. நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்லது எவ்வளவு சிறந்த வீரர் என்பது முக்கியமல்ல. நல்ல விஷயம் என்னவென்றால், விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரை ஓவர்களுக்கு இடையில் பார்த்தபோது, ​​​​சண்டை முடிவுக்கு வந்ததைக் காணலாம்.

மைதானத்தில் அல்லது சமூக ஊடகங்களில் எந்த வீரரையும் ட்ரோல் செய்யவோ அல்லது கேலி செய்யவோ கூடாது என்று கூட்டத்திற்கும் ரசிகர்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த நவீன் முதல்முறையாக ஐபிஎல்லில் விளையாடியது மிகப்பெரிய விஷயம் என்றும் கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கம்பீர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை