2024 டி20 பைனலில் இந்த இரண்டு அணி போட்டியிட வாய்ப்பு இருக்கு – கவுதம் கம்பீர் கணிப்பு.
சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை 2023 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் இறுதி போட்டியில் படுதோல்வி அடைந்து பல கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவை அளித்தது. ஏனென்றால் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி மிகவும் சிறப்பான விளையாட்டை விளையாடியது. குறிப்பாக லீக் போட்
சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை 2023 தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் இறுதி போட்டியில் படுதோல்வி அடைந்து பல கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவை அளித்தது. ஏனென்றால் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி மிகவும் சிறப்பான விளையாட்டை விளையாடியது. குறிப்பாக லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோல்வியடைய வில்லை.
இதனால் இந்த முறை இந்திய அணிதான் இந்த உலக கோப்பை போட்டியை வெல்ல போகிறது என்று நினைத்தனர். இதனால் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த தோல்வியை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்த போதிலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை போட்டியானது நடக்க இருப்பதினால் அந்த கோப்பையையாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வரும் 2024 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டோயானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடந்த இருக்கின்றனர். இந்த நிலையில் தான் 2024 டி20 உலக கோப்பை போட்டியில் இறுதி போட்டிக்கு வரும் அணி குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரரான கவுதம் கம்பீர்
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் குறித்தும் சில சர்ச்சைகள் குறித்தும் பேசியுள்ளார் அவர் கூறுகையில் “இன்னொருவரின் தோல்வியைக் கொண்டாடுவது அர்த்தமற்றது. பாகிஸ்தான் தோற்றால், இந்திய ரசிகர்கள் அதை ரசிக்கிறார்கள், இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெறத் தவறினால் பாகிஸ்தானிலும் அதுவே.
இது எதிர்மறையான அணுகுமுறை. இந்த மனநிலையை மாற்ற வேண்டிய நேரம் இது. சமூக ஊடகங்களுக்காக மக்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர். உங்கள் வெற்றியில் மகிழ்ச்சியைக் கண்டுபிடி, மற்றவர்களின் வலியில் அல்ல என்றார் கம்பீர்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 இல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் போட்டியிடும், மேலும் அவை இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறக்கூடும். ஒரு அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோற்றால், இந்தியாவில் உள்ள ஆதரவாளர்கள் கொண்டாட்ட நிலையில் இருக்கக்கூடாது அல்லது இந்தியா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றார் கம்பீர்.