வீடியோ : கம்பீரின் முன்னர் “கோலி கோலி” என கோஷமிட்ட ரசிகர்கள் – கம்பீர் ரியாக்சன்.

ஐபிஎல் 2023 இன் 39வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே மே 1 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தது. அதில் முதல் சம்பவம் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் சில போட

By ·

ஐபிஎல் 2023 இன் 39வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே மே 1 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தது. அதில் முதல் சம்பவம் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலுக்கு பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் சில போட்டிகள் இந்த ஐபிஎல் சீசனில் விளையாட முடியாது. இரண்டாவது சம்பவம் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே பெரும் வாங்குவாதம் ஏற்பட்டது.

அதாவது அந்த போட்டியின் போது விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. மேலும் ஊடகங்களில் இது தலைப்பு செய்தியாகவும் வந்தது. ஏனென்றால் இவர்கள் இருவருக்குமே சில காலமாக வாக்குவாதம் இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாக இதுபோன்று நடக்காது நிலையில் திடீரென இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சோசியல் மீடியாவில் விராட் மற்றும் கம்பீர் ரசிகர்களிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் அளவிற்கு அந்த வாக்குவாதம் சென்றது. கிட்டத்தட்ட இன்று வரையில் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் கம்பீர் பற்றிய மற்றொரு வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கம்பீர் பெவிலியனை நோக்கி உள்ளே செல்கிறார்.

அப்போது அங்குள்ள ரசிகர்கள் விராட் கோலி என கோஷம் போடுகின்றனர். இதனால் கோபமடைந்து திரும்பிப்பார்த்த கம்பீர் ஒரு 5 வினாடிகள் அங்கு நின்று கோஷமிட்டவர்களை பார்த்து விட்டு உள்ளே சென்றார். அந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு ஈடுபட்ட விராட் கோலி, கவுதம் கம்பீர் மற்றும் நவீன உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம். அவர்கள் விதித்த அபராதத்தின் படி விராட் கோலிக்கு நூறு சதவிகிதம் சம்பளத்தில் இருந்தும், கம்பீருக்கு 100% சம்பளத்திலிருந்து நவீனுக்கு 50% இந்த சம்பளத்தில் இருந்தும் பிடிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை