இவர்களுக்கு அஜாக்கிரதை – வெற்றியடைந்தாலும் நட்சத்திர வீரர்களை விமரசித்த கம்பீர்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரானது நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் ஆசிய அணிகளுக்கு உலக கோப்பை தொடரின் போது நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படு

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடரானது தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரானது நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் ஆசிய அணிகளுக்கு உலக கோப்பை தொடரின் போது நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியானது இந்த தொடரின் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சமாளித்து கொண்டது.

குறிப்பாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய சூப்பர் 4 போட்டியில் இந்தியா மெகா வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. ஏனென்றால் உலகின் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டு அசதியுள்ளது இந்தியா. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இலங்கை அணியை எதிர்கொண்டது இந்தியா.

இந்த போட்டியில் டாஸை வென்ற இந்திய அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது மோசமாக விளையாடியது என்றே சொல்லலாம். இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர். இதனால் இந்திய அணியானது 49.1 ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ரன்களை குவித்தது.

இதனையடுத்து இந்த சுலபமான ஸ்கொரை எதிர்த்து களமிறங்கிய இலங்கை அணியால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரரான கம்பீர்.

அவர் கொடுத்த பேட்டியில் “இது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த முறை சென்னையில் நடைபெற்ற போட்டியில் பந்து லேசாக பிடித்து வந்த போது ஆடம் ஜாம்பா, அஸ்டன் அகர் போன்ற ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தியா 269 ரன்களை கூட எடுக்க முடியவில்லை. பந்து கொஞ்சம் நின்று வரும் போது இந்தியா அதிகமாக தடுமாறுகிறது. இது 350 ரன்கள் அடிக்கும் பிட்ச் கிடையாது 270 ரன்கள் எடுக்கக் தகுடன்ஹா ஒரு மைதானம். 

இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் 40 ஓவரில் 160 – 170 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தால் உங்களுடைய ஆட்டத்தை கொஞ்சம் மற்றையமைக்க வேண்டும் அது போன்ற நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவு சிறந்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக கில் ஒரு சிறப்பான பந்தில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா வேகமாக வந்ததினால் ஆட்டமிழந்தார்.

ஆனால் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மிகவும் அஜாக்கிரதையாக விளையாடிதாக எனக்கு தோன்றுகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் நீங்கள் இன்னும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று விமரசித்து பேசியுள்ளார் கம்பீர். பொதுவாகவே கம்பீர் விராட் கோலியை விமர்சிப்பது வழக்கமான ஓன்று என்று இதுவும் அந்த வகையில் எடுத்து கொள்ளலாம் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை