சாதனை செய்வார் என்ற நேரத்தில் சறுக்கிய விராட் கோலி – ஆறுதலாக பேசிய பாக் வீரர்.. விமர்சித்த கம்பீர்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது தற்போது நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப்போட்டியில் முக்கியமான தருணம் என்று கூறினால் முன்னதாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
பொதுவாக இன்சைட் எட்ஜ் வாங்கி அவுட்டாவது துரதிஷ்டம் வசமென்று சொல்வார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் ஜாம்பவான் இந்த அவுட் குறித்து பேசுகையில் “கோலி சற்று துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஏனெனில் இன்சைட் எட்ஜ் வாங்கிய பந்து பேட்டுக்கு சரியாக வராமல் சற்று கீழே சென்றது. இருப்பினும் அந்தளவுக்கு லென்த்தை குறைத்த ஷாஹீன் அப்ரிடிக்கு பாராட்டு கொடுக்க வேண்டும் என்று கொஞ்சம் ஆறுதல் கூறினார்.
— CricDaily24 (@cricday96) September 2, 2023
ஆனால் அதே நிகழ்ச்சியில் வர்ணனை செய்த முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் அதை ஏற்றுக் கொள்ளாமல் விராட் கோலி எவ்விதமான ஷாட்டையும் அடிப்பதற்கு முயற்சிக்காமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியதே அவுட்டானதற்கு காரணம் என்று விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியது பின் வருமாறு. “அதில் எந்த ஷாட்டும் இல்லை. ஏனெனில் அவர் முன்னோக்கி பின்னோக்கி செல்லவில்லைமாறாக மிகவும் சாதாரணமாக விளையாடினார் என்று நினைக்கிறேன்.
அப்படி சாகின் அப்ரிடி போன்றவருக்கு எதிராக நீங்கள் அஜாக்கிரதையாக விளையாடினால் இப்படி தான் அவுட்டாவீர்கள். அந்த சமயத்தில் அவருக்கு முன்னோக்கி செல்வதாக அல்லது பின்னோக்கி செல்வதா என்பது தெரியாமல் இருந்தது என்று கூறி விமர்சித்துள்ளார். இந்நிலையில் கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள பிரச்னை பல காலமாக இருந்தது வருகிறது. அதில் இதுவும் ஒன்று என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.