நீங்க அடிக்கும் 50, 60 ரன்களில் எந்த பயனும் இல்லை: பாபர் ஆசாமை கிழித்த கவுதம் கம்பீர்.

பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 5 இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியும் 1௦ இடத்

By ·

பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம். உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 5 இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியும் 1௦ இடத்தில ஆப்கானிஸ்தான் அணியும் நேற்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இவ்விரண்டு அணிகளும் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் அணி கடைசி இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை தழுவியது.

அதே போல் ஆப்கானிஸ்தான் அணி கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி உள்ளது. இந்த இரண்டு அணிகளும் செமி பைனலுக்கு செல்ல இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் சிக்கி இன்று போட்டியை விளையாடியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. நீண்ட நாட்களாக தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த போட்டியில் அவருடைய சிறப்பான பேட்டிங்கின் மூலம் 50 ஓவர்களில் 282 ரன்களை குவித்தது.

பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களும், ஷபீக் 58 ரன்களும், இப்திகார் அகமது 40 ரன்களும் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நூர் 3 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் நபி மற்றும் அஹமதுல்லா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 283 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவரிலே மாபெரும் வெற்றியை அடைந்தது அணிக்கு அதிக பட்சமாகஇப்ராஹிம் சத்ரான் 87ரன்களும், ரஹ்மத் ஷா 77 ரன்களும், குர்பாஸ் 65 ரன்களும் குவித்தனர். பாபர் அசாம் குறித்தும் அணியின் தோல்வி குறித்தும் கம்பீர் சிலவற்றை கூறியிருந்தார்.

கம்பீர் கூறியது:

“பாபர் அசாம் அழுத்தத்தில் இருக்கிறார், ஒட்டுமொத்த அணியும் அழுத்தத்தில் உள்ளது. அவருக்கு அதிக திறன் உள்ளது. அதனால் தான் நான் முதல் 5 இடங்களில் பாபர் ஆசாமைத் தேர்ந்தெடுத்தேன், இந்தியாவின் ஆடுகளங்களில் 3-4 சதங்கள் அடிப்பார் என்று ஆதரவு அளித்தேன். இப்போதும் அதைச் செய்யும் திறன் பாபரிடம் உள்ளது” 60 அல்லது 70 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தாலோ அல்லது 120 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தாலோ எந்தப் பயனும் இல்லை என்பதால் அவர் ரன்களை அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

அவர் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய விதம், அவர் மற்ற பேட்டிங் யூனிட் மீது அதிக அழுத்தத்தை கொடுத்தார் மற்றும் அவர் அழுத்தத்தை வெளியிடவில்லை. “அணி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட விரும்பினால், நீங்கள் முன்னணியில் இருந்து வழிநடத்த வேண்டும். பாபர் சுதந்திரமாக விளையாட வேண்டும், அவர் அவுட் ஆஃப் தி-பாக்ஸ் கிரிக்கெட்டை விளையாட வேண்டும், பாகிஸ்தான் அரையிறுதிக்கு வர வேண்டுமானால், கேப்டன் பதவிக்கு வெளியேயும் விளையாட வேண்டும். என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை